'சிஎஸ்கேவுக்கு 'இங்க' அடிச்சா வலிக்கும்!.. ஆனா 'இந்த' விஷயத்தில ஒன்னுமே பண்ண முடியாது'!.. சென்னை சூப்பர் கிங்ஸ் பலம் என்ன?.. பலவீனம் என்ன?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manishankar | Apr 01, 2021 11:31 PM

இந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பலம் மற்றும் பலவீனம் என்ன என்பதை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

ipl csk strength weakness dhoni raina uthappa details

14வது ஐபிஎல் சீசன் வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே 30ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்காக அனைத்து அணிகளும் தற்போது தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது.

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமலேயே வெளியேறி ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இதனால் இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்றே ஆகவேண்டும் என்று தீர்மானமாக இருக்கிறது.

அதற்காக ஏலத்தில்  ராபின் உத்தப்பா,  கிருஷ்ணப்பா கவுதம், மொயின் அலி போன்ற நட்சத்திர வீரர்களை தேர்வு செய்திருக்கிறது. தற்போது இவர்கள் எல்லாம் அணியுடன் இணைந்து தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த ஆண்டு ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பலம் மற்றும் பலவீனம் குறித்து காண்போம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு ஏலத்தில் உத்தப்பா, கிருஷ்ணப்பா கவுதம், மொயின் அலி போன்ற நட்சத்திர வீரர்களை தேர்வு செய்தது நல்லதாக கருதப்படுகிறது.

சுரேஷ் ரெய்னா மீண்டும் அணியில் இணைத்திருப்பது மிடில் ஆர்டர் பிரச்சினையை தீர்த்து வைக்கும். மேலும் தோனி, டுப்லஸ்ஸிஸ், ஜடேஜா, அம்பத்தி ராயுடு மற்றும் சாம் கரன் இருப்பது அணிக்கு பலம் சேர்க்கும். பந்துவீச்சில் ஷர்துல் தாகூர், இம்ரான் தாகிர், தீபக் சஹர் மற்றும் லுங்கி நெகிடி இருப்பது சிஎஸ்கேவுக்கு கூடுதல் பலம்.

சிஎஸ்கேவின் பலவீனம் என்றால் வேகப்பந்து வீச்சாளர் ஹாசில்வுட் தற்போது ஐபிஎல்லில் இருந்து விலகி இருப்பது. ஏனெனில், சிஎஸ்கே விளையாடும் மும்பை மற்றும் கொல்கத்தா மைதானங்கள் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கைகொடுக்கும். சிஎஸ்கேவில் தற்போது அதிகமாக ஸ்பின் பவுலர்கள் மட்டுமே இருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் ஹாசில்வுட் விலகியது சிஎஸ்கேவுக்கு மிகப்பெரிய இழப்புதான். இதையடுத்து சுரேஷ் ரெய்னா, தோனி, அம்பத்தி ராயுடு, இம்ரான் தாஹிர் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சில காலங்களாக கிரிக்கெட் விளையாடவில்லை. இதனால் அவர்களது ஃபார்ம் தற்போது எந்த நிலையில் இருக்கிறது என்று தெரியவில்லை.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Ipl csk strength weakness dhoni raina uthappa details | Sports News.