"இவ்ளோ நாள் தலையில தூக்கி வெச்சு கொண்டாடுனீங்களே... இப்போ தெரியுதா??..." உண்மையை போட்டுடைத்த முன்னாள் 'வீரர்'.. ஷாக்கான 'ரசிகர்கள்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு14 ஆவது ஐபிஎல் சீசன் ஏப்ரல் 9 ஆம் தேதியன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், இதற்காக அனைத்து அணி வீரர்களும் சிறப்பாக தயாராகி வருகின்றனர்.

முன்னதாக, கடந்த 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக, புனே மற்றும் குஜராத் அணிகள் புதிதாக இடம்பெற்று, இரண்டு ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் கலந்து கொண்டது. சென்னை அணியை வழிநடத்திய தோனி, 2016 ஆம் ஆண்டில் புனே அணியை வழி நடத்தினார்.
அந்த ஆண்டு புனே அணி சிறப்பாக செயல்படாத காரணத்தால், 2017 ஆம் ஆண்டு புனே அணியின் கேப்டனாக, ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை அணி நிர்வாகம் நியமித்தது. அந்த சீசனில், புனே அணி இறுதி போட்டி வரை முன்னேறி, இரண்டாம் இடம் பிடித்திருந்தது. தோனியின் தலைமையில், சரிவை சந்தித்த புனே அணி, ஸ்மித் தலைமையில் அசத்தியதால், தோனியின் கேப்டன்சி அப்போது கடுமையான விமர்சனங்களை சந்தித்திருந்தது.
இந்நிலையில், அந்த அணியில் இடம்பெற்றிருந்த இந்திய வீரர் ராஜத் பாட்டியா (Rajat Bhatia), புனே அணி இறுதி போட்டிக்கு முன்னேறியதற்கான காரணம் என்ன என்பது குறித்து பேசியுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'என்னைப் பொறுத்தவரை, ஐபிஎல் போட்டியில் வெற்றிகரமான கேப்டன் என்றால், அது இந்திய வீரராக தான் இருக்க முடியும். அதே சமயத்தில், முதல் தர போட்டிகளில் ஆடும் வீரர்களை பற்றி, நன்கு தெரிந்தவராக இருக்க வேண்டும். புனே அணியில் இருந்த ராகுல் திரிபாதி, எப்படி ஆடுவார் என்பதும், எந்த மாநிலத்திற்காக ஆடினார் என்பதும் ஸ்டீவ் ஸ்மித்திற்கு தெரியாது.
2017 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில், புனே அணி இறுதி போட்டிக்கு முன்னேறியதற்கான முக்கிய காரணம் எம்.எஸ். தோனி தானே தவிர ஸ்டீவ் ஸ்மித் இல்லை. ஒரு போதும், ஸ்டீவ் ஸ்மித்தை தோனியுடன் ஒப்பிடக் கூடாது. ஸ்மித்திற்கு கேப்டன்சி பற்றி எதுவும் தெரியாது. ஒரு இக்கட்டான சூழ்நிலையில், எந்த பந்து வீச்சாளரை பந்து வீச செய்வது என்பதும் அவருக்கு தெரியாது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஸ்மித்தை கேப்டனாக நம்பி அணியில் எடுத்தது, முதலில் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதன் பிறகு, அவர்கள் ஸ்மித்தை அணியில் இருந்து விடுவிக்கவும் செய்தனர்' என ராஜத் பாட்டியா தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
