‘ஒருத்தரும் வேண்டாம்’!.. மொத்தமாக அணியை கலைத்து புதிதாக மாற்றப் போகும் முன்னணி ‘ஐபிஎல்’ அணி..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் ஏலம் நடைபெற உள்ள சூழலில் முன்னணி அணி யாரையும் தக்க வைக்க விரும்பவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதனை அடுத்து அடுத்த வருடம் ஐபிஎல் தொடர் ஏப்ரல் மாதம் தொடங்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இதற்கு முன்னதாக ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு முதல் அகமதாபாத், லக்னோ என 2 புதிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளது. அதனால் அனைத்து அணி வீரர்களும் கலைக்கப்பட்டு புதிதாக ஏலம் நடைபெற உள்ளது.
இதனிடையே ஒவ்வொரு அணியும் நான்கு வீரர்களை தக்க வைத்துக்கொள்ள பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. இதனை வரும் நவம்பர் 30-ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. சிஎஸ்கே அணியை பொறுத்தவரை கேப்டன் தோனி தக்க வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணி தங்கள் அணியில் இருந்த எந்த வீரரையும் தக்க வைக்க விரும்பவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பஞ்சாப் அணி மோசமான தோல்விகளை சந்தித்து வருகிறது. இதுவரை நடந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை. அதனால் அனைத்து வீரர்களையும் அந்த அணி ஏலத்தில் விட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்
