‘நல்லா செம கட்டு கட்டுறாங்கப்பா..!’- தல தோனி உடன் CSK அணியினரின் அவுட்டிங் போட்டோஸ் வைரல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதல தோனி உடன் சிஎஸ்கே அணியினர் சிலர் உற்சாகமாக விருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போட்டோ ஒன்று சமுக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. சக சிஎஸ்கே வீரர் ஆன ஷ்ரத்துல் தாக்கூர் அந்த ‘டின்னர்’ போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து லைக்குகளை அள்ளி வருகிறார்.
தல தோனி உடன் சிஎஸ்கே அணியைச் சேர்ந்த ராபின் உத்தப்பா, கரன் ஷர்மா, லட்சுமிபதி பாலாஜி ஆகியோர் இந்த டின்னர் புகைப்படத்தில் இடம் பெற்றுள்ளனர். இந்தப் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளர் ஷ்ரத்துல் தாக்கூர், அதில் ‘foodies’ என கேப்ஷன் போட்டுள்ளார். ஷ்ரத்துல் பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே ஒரு லட்சம் லைக்குகளை அந்தப் புகைப்படம் நெருங்கிவிட்டு இருந்தது.
தல தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி 2021 ஐபிஎல் போட்டித் தொடரின் இறுதியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன்ஷிப் கோப்பையைக் கைப்பற்றியது. இதன் மூலம் தொடர்ந்து 4-வது முறையாக சாம்பியன்ஷிப் கோப்பையை சிஎஸ்கே அணி கைப்பற்றி உள்ளது. இதற்காக கடந்த சனிக்கிழமை தோனி உட்பட முக்கியமான சிஎஸ்கே அணி வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான பாராட்டு விழாவில் கலந்து கொண்டனர்.
தோனி, உத்தப்பா அம்பதி ராயுடு, ஷ்ரத்துல் தாக்கூர், கரன் ஷர்மா, பகத் வர்மா மற்றும் அசிஃப் ஆகியோருக்கு சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான பாராட்டு விழாவில் நினைவு பரிசுகளை பெற்றனர். இதனால் சென்னையில் தான் இந்த டின்னர் அவுட்டிங் நடந்ததா என்றும் சமுக வலைதளங்களில் சிஎஸ்கே ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின், “இன்று விழாவுக்கு நான் தோனி ரசிகனாக வந்துள்ளேன். என் அப்பா கலைஞர் தோனியின் ரசிகர். எனது பேரக்குழந்தைகளும் என்னுடன் தோனி ரசிகர்களாக விழாவுக்கு வந்துள்ளார்கள். 2021 ஐபிஎல் வெற்றியாளர்களான சிஎஸ்கே அணியினருக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் நான் பெருமைபடுகிறேன்” எனக் கூறினார்.