‘பிடிச்சவுங்க ஒதுக்கும்போது… வலிக்குதுங்க..!’- வார்னர் இந்த அளவுக்கு கலங்கிப் போனதற்கு யார் காரணம்..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி20 உலகக்கோப்பையைக் கைப்பற்ற ஆஸ்திரேலியா அணிக்கு பெரிய உதவியாக இருந்தவர் டேவிட் வார்னர். தொடர்ச்சியான எதிர்மறை விமர்சனங்களுக்கு உள்ளானவர் தற்போது வைரல் நாயகன் ஆக பாராட்டுகளைக் குவித்து வருகிறார்.

டேவிட் வார்னர் உலகக்கோப்பை போட்டியில் தொடர் நாயகன் விருது வாங்கி ரசிகர்களின் பெரும் ஆதரவைப் பெற்றார். ஆனால், கடந்த ஐபிஎல் 2021 போட்டியின் மீது சரியான ஃபார்மில் இல்லை என பலத்த விமர்சனங்களுக்கு உள்ளானவர் வார்னர். ஐபிஎல் 2021-ன் போட்டியின் போது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாடி வந்தார். ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட வார்னர் இரண்டாம் பாதியில் ‘ஆடும் 11 வீரர்கள்’ பட்டியலில் இருந்தும் நீக்கப்பட்டார்.
இறுதியில் 2021 ஐபில் தொடரில் குறைந்தபட்ச புள்ளிகள் உடன் கடைசி இடத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் போட்டியை நிறைவு செய்தது. ஆனால், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை விட வார்னருக்கான விமர்சனங்கள் தான் அதிகம் எழுந்தன. ஆனால், சமீபத்தில் நிறைவடைந்த டி20 உலகக்கோப்பையின் போது மொத்த தொடரில் அதிகப்பட்சமாக 289 ரன்கள் எடுத்து ‘தொடர் நாயகன்’ விருதைப் பெற்றார் வார்னர். இந்த சூழலில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தன்னை நடத்திய விதம் குறித்து வார்னர் வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.
வார்னர் கூறுகையில், “எனக்கு மிகவும் பிடித்த அணியில் வருடக்கணக்காக விளையாடிவிட்டு திடீரென்று அவர்கள் என்னை நீக்கிய போது அது எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. என் மீது தவறு இல்லாத போது என்ன காரணம் என்று கூட விளக்காமல் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டேன். அப்போது எனக்கு மிகவும் வலித்தது. ஆனால், அதற்காக நான் புகார் சொல்கிறேன் என நினைக்க வேண்டாம். இந்தியாவில் எனக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காகத் தான் நான் ஐபிஎல் விளையாடுகிறேன். அவர்களை மகிழ்ச்சிபடுத்ததான் நாங்கள் பலரும் விளையாடுகிறோம்.
ஐபிஎல் போட்டிகளில் அணியில் எனக்கு இடம் இல்லாமல் போயிருக்கலாம். ஆனால், ஒரு நாள் கூட நான் பயிற்சி செய்யாமல் இருந்தது இல்லை. கடுமையான இதுவரையில் பயிற்சி செய்து கொண்டுதான் இருக்கிறேன். நெட் பயிற்சியின் போது எல்லாம் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறேன். ஆனால், எல்லாத்துக்கும் காலம் கைகூடி வரும். எனக்கு ஐபிஎல் தொடரின் போது வலி ஏற்பட்டாலும் எனக்கு வாய்ப்புகள் நிச்சயம் இருக்கிறது என நம்புகிறேன்.
ஆனால், எது மிகப்பெரிய வேதனை என்றால் என்னிடம் இதுவரையில் அவர்கள் தரப்பில் இருந்து ஒரு விளக்கம் கூட கொடுக்கப்படவில்லை. என்னதான் நீங்கள் கடந்த காலங்களில் சிறப்பாக விளையாடி இருந்தாலும் அது கொஞ்சமாவது உங்களுக்கு மதிப்பு அளிக்கும் என்று நினைக்கிறேன். சன் ரைசர்ஸ் ஹைதராபாத்துக்காக 100 ஆட்டங்கள் ஆடியிருக்கிறேன். ஆனால், ஒரு 4 மேட்சுகள் சரியாக ஆடவில்லை” என்று கூறியுள்ளார் வார்னர்.

மற்ற செய்திகள்
