என்னது உலகக்கோப்பை ஜெயிச்சதுக்கு அப்பறம் தான் கல்யாணமா..? SRH வீரருக்கு ‘ஷாக்’ கொடுத்த தகவல்.. உண்மை என்ன..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதிருமணம் செய்து கொள்வது குறித்து எழுத்த சர்ச்சை கருத்துக்கு ரஷீத் கான் விளக்கம் கொடுத்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் இலங்கை ஆகிய அணிகள் தலா ஒரு முறையும், வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு முறையும் கோப்பையை கைப்பற்றியுள்ளன.
இதில் ஆப்கானிஸ்தான் அணி ஒருமுறை கூட டி20 உலகக்கோப்பையை கைப்பற்றியதில்லை. இந்த சூழலில் ஆப்கானிஸ்தான் நாடு தாலிபான்களின் வசம் வந்துள்ளது. தாலிபான்கள் ஆட்சியின் கீழ் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி விளையாடும் முதல் உலகக்கோப்பை தொடர் இது என்பதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான ரஷித் கான், தனது நாட்டுக்காக உலகக்கோப்பை வென்று கொடுத்தப்பின் தான் திருமணம் கொள்ள இருப்பதாக தகவல் பரவியது. இது சமூக வலைதளங்களில் வைரலாகவே, ரஷித் கான் அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.
அதில், ‘இதை கேட்டதும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. உண்மையை சொல்லவேண்டுமானால், உலகக்கோப்பையை வென்ற பின் தான் திருமணம் செய்துகொள்வேன் என்று நான் சொல்லவே இல்லை. அடுத்த சில வருடங்கள் நிறைய கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளேன் என்று கூறினேன். 3 உலகக்கோப்பை தொடர்கள் (2021 மற்றும் 2022 டி20 உலகக்கோப்பை, 2023 ஒருநாள் உலகக்கோப்பை) வர உள்ளதால், அதில் மட்டுமே தற்போது கவனம் செலுத்தி வருகிறேன். அதனால் இப்போதைக்கு திருமணத்தைப் பற்றி யோசிக்கவில்லை என்று கூறினேன்’ என ரஷித் கான் விளக்கம் கொடுத்துள்ளார்.
முன்னதாக டி20 உலகக்கோப்பை தொடருக்கான வீரர்கள் தேர்வு குறித்து தன்னிடம் அணி நிர்வாகம் கலந்து ஆலோசிக்கவில்லை என்று கேப்டன் பொறுப்பில் இருந்து ரஷித் கான் விலகினார். இவர் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சார்பாக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
