என்னது இவரும் ‘புதிய’ ஐபிஎல் அணிகளை வாங்க ஆர்வமா இருக்காரா..? அப்போ ‘ஜெர்சி’ டிசைனெல்லாம் வேறலெவல்ல இருக்குமே.. இணையத்தில் தெறிக்கும் மீம்ஸ்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Oct 22, 2021 07:53 PM

புதிய ஐபிஎல் அணிகளை வாங்க பாலிவுட்டின் பிரபல தம்பதியினர் ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

DK reacts to news of Ranveer, Deepika bidding for new IPL team

கடந்த 2008-ம் ஆண்டு ஐபிஎல் (IPL) டி20 தொடரை பிசிசிஐ அறிமுகப்படுத்தியது. இதில் தற்போது வரை 8 அணிகள் விளையாடி வருகின்றன. இந்த சுழலில் அடுத்த ஆண்டு 2 புதிய அணிகள் சேர்க்கப்பட உள்ளதாக பிசிசிஐ (BCCI) தெரிவித்துள்ளது. இந்த அணிகளை வாங்குவதற்கான ஏலம் வரும் 25-ம் தேதி துபாயில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

DK reacts to news of Ranveer, Deepika bidding for new IPL team

இதனிடையே இந்த ஏலத்தில் கலந்து கொள்வதற்கான விண்ணப்ப படிவங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. புதிய ஐபிஎல் அணிகளை வாங்க விரும்பும் நிறுவனமோ அல்லது தனி நபரோ, ஆண்டுக்கு 3000 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் வைத்திருக்க வேண்டும் என பிசிசிஐ விதிமுறை அறிவித்துள்ளது.

DK reacts to news of Ranveer, Deepika bidding for new IPL team

அதனால் இந்தியாவை சேர்ந்த அதானி குழுமம், ஆர்பி சஞ்சீவ் கோங்கே போன்ற பல முன்னணி நிறுவனங்கள் புதிய ஐபிஎல் அணிகளை வாங்க முனைப்பு காட்டி வருகின்றன. அந்த வகையில் பிரபல கால்பந்து அணியான மான்செஸ்டர் யுனைடெட் (Manchester United) கிளப்பின் உரிமையாளர்கள் ஐபிஎல் ஏலத்தில் கலந்து உள்ளதாக நேற்று தகவல் வெளியாகினது.

DK reacts to news of Ranveer, Deepika bidding for new IPL team

இந்த நிலையில் பாலிவுட் நட்சத்திரங்களும், தம்பதியுமான ரன்வீர் சிங்கும் (Ranveer Singh), தீபிகா படுகோனும் (Deepika Padukone) மான்செஸ்டர் யுனைடெட் கிளப்புடன் இணைந்து புதிய ஐபிஎல் அணிகளை வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DK reacts to news of Ranveer, Deepika bidding for new IPL team

இதில் ரன்வீர் சிங் எப்போதும் சற்று வித்தியாசமாக ஆடை அணிந்து கவனம் பெறுவது வழக்கம். அதனால் இந்த தம்பதியினர் புதிய ஐபிஎல் அணியை வாங்கினால், அந்த அணிக்கான ஜெர்சி எப்படி இருக்கும் என நெட்டிசன்கள் நகைச்சுவையாக பதிவிட்டு வருகின்றனர். அதேபோல் இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கும் இதுகுறித்து ட்வீட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. DK reacts to news of Ranveer, Deepika bidding for new IPL team | Sports News.