அடுத்த ஐபிஎல்-ல் ரெண்டு 'புதிய அணிகள்' ரெடி...! ஏலத்துல 'யாரு' எடுத்துருக்காங்க தெரியுமா...? - அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிசிசிஐ...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் கிரிக்கெட் தொடரில் புதிதாக சேர்க்கப்பட்ட இரு அணிகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுக்க ரசிகர்கள் உள்ளனர். இதுவரை 8 அணிகள் மட்டுமே இருந்த ஐபிஎல் சீசனில் தற்போது 2 அணிகள் சேர்க்கப்படுவதாக பேச்சுக்கள் எழுந்தன.
தற்போது வரை சென்னை, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, டெல்லி, ராஜஸ்தான், கொல்கத்தா, பஞ்சாப் உள்ளிட்ட 8 அணிகள் உள்ளன. 2021-ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் கொல்கத்தா மற்றும் சென்னை அணிகள் மோதிய நிலையில் சென்னை அணி வென்றது.
அதோடு, ஐபிஎல் கோப்பையை மும்பை அணி 5 முறையும், சென்னை அணி 4 முறையும், கொல்கத்தா அணி 2 முறையும், ராஜஸ்தான், ஹைதராபாத், டெக்கான் சார்ஜர்ஸ் உள்ளிட்ட அணிகள் தலா 1 முறையும் கோப்பையை வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அடுத்த ஆண்டு முதல் லக்னோ மற்றும் அகமதாபாத்தை மையமாக கொண்ட அணிகள் உருவாக்கப்படுள்ளன. இன்று நடைபெற்ற ஏலத்தில் புதிய 2 அணிகளை கைப்பற்றுவதற்கான போட்டி முக்கிய நிறுவனங்களிடையே கடுமையான போட்டி நடைபெற்றது.
இதில், லக்னோ நகரத்தை மையமாக கொண்ட அணியை ஆர்.பி.எஸ்.ஜி நிறுவனம் தோராயமாக ரூ.7000 கோடிக்கு கைப்பற்றியது. மேலும், அகமதாபாத் நகரை மையமாக கொண்ட அணியை சிவிசி கேப்பிடல் பார்னர்ஸ் மதிப்பு சுமார் ரூ.5,200 கோடியாக உள்ளது.