2022 ஐபிஎல்-ல 'அந்த பையன' ஏலம் எடுக்க இப்போவே பலர் வெயிட்டிங்...! 'மினிமம் 20+ கோடி கன்ஃபார்ம்... ' - முன்னாள் வீரர் கருத்து...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணியுடன் மோதிய இரு டி-20 போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. அதன்படி இந்தியா நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரை கைப்பற்றியுள்ளது.

நேற்று (19-11-2021) நடைபெற்ற போட்டியில் முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்களை எடுத்தது.
இதனையடுத்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு கே.எல் ராகுலும், ரோஹித் சர்மாவும் மிக சிறப்பான துவக்கம் கொடுத்தனர்.
இதில் கே.எல் ராகுல் 49 பந்துகளில் 70 ரன்களை எடுத்து நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார்.
நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமான கே.எல் ராகுல், ரோஹித் சர்மா, ஹர்சல் பட்டேல் போன்ற வீரர்களை முன்னாள் வீரர்கள் பலர் வெகுவாக பாராட்டி பேசி வருகின்றனர்.
அதில் முக்கியமாக முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா, அடுத்த வருட ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் நிச்சயம் 20 கோடி ரூபாய்க்கு ஏலம் போவார் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கூறிய அவர் 'கே.எல் ராகுலை ஐபிஎல் போட்டியில் நான் நீ என போட்டி போட்டு கொண்டு ஏலம் எடுக்க பலர் இப்போதிலிருந்தே காத்து கொண்டு இருக்கின்றனர். அவர் மட்டும் ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் பங்கேற்றால் நிச்சயம் குறைந்தது 20+ கோடி ரூபாய்க்கு ஏலம் போவார்' என தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
