அம்பானி வீட்டில் நடப்படும் அதிசய மரம்.. காட்டிலிருந்து இடம் பெயரும் பிரமாண்டம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉலகப் பணக்காரர்களுள் ஒருவரான முகேஷ் அம்பானி வீட்டில் அலங்காரத்துக்காக டன் கணக்கில் எடை கொண்ட இரண்டு மரங்கள் ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்பட்டு நடப்பட்டுள்ளன. ஸ்பெயினில் பிறந்த 2 ஆலிவ் மரங்களும் தற்போது குஜராத்தில் உள்ள அம்பானி வீட்டில் அலங்காரம் செய்ய உள்ளன.
ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரியில் உள்ள கதிம் நர்சரியில் இருந்து இந்த இரண்டு ஆலிவ் மரங்களும் அம்பானி வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. குஜராத்தில் ஜாம்நகரில் உள்ள முகேஷ் அம்பானி வீட்டில் இந்த இரு மரங்களும் நட்டு வைக்கப்பட உள்ளன. ஒரு ஆலிவ் மரத்துக்கு 42 லட்சம் ரூபாய் என 2 மரங்களுக்கு 84 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளார் முகேஷ் அம்பானி.
இந்த 2 ஆலிவ் மரங்களும் வீட்டில் இருந்தால் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கையாம். இந்த இரண்டு மரங்களும் 180 ஆண்டுகள் பழமையான மரங்கள் ஆகும். 1,000 ஆண்டுகள் வாழ்நாள் கொண்டவை இந்த ஐஸ்வர்யம் தரும் ஆலிவ் மரங்கள். சில காலத்துக்கு முன்னர் ஸ்பெயினில் இருந்து கொண்டு வரப்பட்ட இந்த மரங்களை ஆந்திரா நர்சரி கார்டன் ஒன்றில் கோதாவரி மண் போட்டு வளர்த்துள்ளனர்.
இந்த மரங்களை ராஜமுந்திரியில் இருந்து ஜாம்நகருக்கு எடுத்துச் செல்ல மட்டும் 3 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. டன் கணக்கில் எடை கொண்ட மரங்கள் என்பதால் மணிக்கு வெறும் 30 கி.மீ வேகத்தில் மட்டுமே இவற்றை எடுத்துச் செல்லும் லாரி பயணிக்க முடியும். நவம்பர் 29-ம் தேதி ஜாம்நகர் செல்லும் இந்த மரங்கள் பின்னர் அம்பானி வீட்டில் நடப்பட உள்ளது.