‘திரும்பி வரதுக்குள்ள இப்டி ஒரு அவுட்டா’.. ஏபிடியை மிரளவிட்ட பொல்லார்ட்’ வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Apr 16, 2019 12:05 AM
பெங்களூரு அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் டி20 லீக்கின் 31 -வது போட்டி இன்று(15.04.2019) மும்பையில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின.
இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 171 ரன்களை எடுத்தது. இதில் கேப்டன் விராட் கோலி 8 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இதனை அடுத்து ஜோடி சேர்ந்த ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் மொயின் அலி கூட்டணி அதிடியாக விளையாட ஆரம்பித்தது. இதில் மொயின் அலி 32 பந்துகளில் 50 ரன்கள் எடுத்திருந்தார். ஏபி டிவில்லியர்ஸ் 75 ரன்கள் எடுத்திருந்த போது பொல்லார்ட் செய்த ரன் அவுட் மூலம் வெளியேறினார்.
இதனைத் தொடர்ந்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை அணி 19 ஓவர்களில் 172 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக டி காக் 40 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 37 ரன்களும் எடுத்திருந்தனர்.
https://t.co/DmhhvDNSuv abd run out
— Thalapathy Love (@Guruselva33) April 15, 2019
