'இப்டி' பண்ணிட்டீங்களே கேப்டன்... போட்டிபோட்டு 'கலாய்க்கும்' ரசிகர்கள்... எதுக்குன்னு பாருங்க?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Jan 26, 2020 08:10 PM

இன்று நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 132 ரன்களை எடுத்தது. தொடர்ந்து 2-வதாக பேட்டிங் செய்த இந்திய அணி 17.3 ஓவர்களில் 135 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் வழியாக இந்திய அணி டி20 தொடரில் தற்போது 2-0 என முன்னிலை வகித்து வருகிறது.

IND Vs NZ: Virat Kohli drops an easy catch, Twitter Reacts

இன்றைய போட்டியின்போது கேப்டன் விராட் கோலி அற்புதமாக இரண்டு கேட்சுகளை பிடித்து மார்ட்டின் குப்தில் (33), காலின் முன்ரோ (26) இருவரையும் வெளியேற்றினார். தொடர்ந்து 18-வது ஓவரின் போது 11 ரன்களில் இருந்த ராஸ் டெய்லர் மிகவும் எளிதான கேட்ச் ஒன்றை கொடுத்தார். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் அந்த கேட்சை விராட் நழுவ விட்டார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் விராட் கோலியும் மனிதர் தானே என்று அவருக்கு ஆதரவாகவும், இப்டி பண்ணிட்டீங்களே கேப்டன் என்று அவரை கலாய்த்தும் ட்வீட் செய்து வருகின்றனர். இதனால் ட்விட்டரில் விராட் கோலி குறித்த மீம்ஸ்கள் தற்போது கொடிகட்டி பறக்கின்றன.