எனக்கே விபூதி 'அடிக்க' பாத்தல்ல... கேட்ச் பிடித்து 'கெட்ட' வார்த்தையால் திட்டிய கேப்டன்... வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇன்று நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணியை இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வீழ்த்தியது. இதன் மூலம் 5 டி20 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் தற்போது இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி மார்ட்டின் குப்தில், காலின் முன்ரோ இருவரும் ஓபனிங் பேட்ஸ்மேன்களாக இறங்கி அதிரடியாக ஆடினர். ஆனால் அணியின் ஸ்கோர் 48 ஆக இருந்தபோது ஷர்துல் தாகூரின் பந்தில் விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து குப்தில் 33 ரன்களில் வெளியேறினார்.
Martin Guptill-out
Catched by our hero #ViratKohli 😍😍 pic.twitter.com/GPVHdRV8XS
— phanireddyS (@MRmajnu_18) January 26, 2020
இதையடுத்து நியூசிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுக்க 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 132 ரன்களை சேர்த்தது. இந்திய அணி சார்பில் ஜடேஜா அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை எடுத்தார். இதையடுத்து 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித்(8), விராட் கோலி(11) அடுத்தடுத்து அதிர்ச்சி அளித்தனர்.
எனினும் கே.எல்.ராகுல்(52), ஷ்ரேயாஸ் ஐயர்(44) ஆகியோரின் அதிரடியால் இந்திய அணி 17.3 ஓவர்களில் 135 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. போட்டியின் போது நியூசிலாந்து வீரர் குப்தில்(33) அடித்த பந்தை எளிதாக கேட்ச் பிடித்து கேப்டன் விராட் கோலி அவரை வெளியேற்றினார். அவரின் விக்கெட்டை எடுத்ததும் மிகவும் ஆக்ரோஷமாக கெட்ட வார்த்தை ஒன்றை சொல்லி அதை விராட் கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கடந்த டி20 போட்டியில் விராட் கோலி கொடுத்த கடினமான கேட்சை பிடித்து அவரை 44 ரன்களில் குப்தில் பெவிலியன் அனுப்பி வைத்தார். அதுதான் இந்த முறை அவரது விக்கெட்டை எடுத்தவுடன் கோலி உணர்ச்சி வசப்பட்டதற்கு காரணம் என்று தோன்றுகிறது.