WATCH: என்ன கேப்டன் நீங்களே ‘இப்டி’ பண்ணலாமா.. ஆரம்பமே காத்திருந்த அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 201 ரன்களை குவித்தது.

ஐபிஎல் தொடரின் 22-வது லீக் போட்டி இன்று துபாய் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 201 ரன்களை ஹைதராபாத் அணி எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஜானி பேர்ஸ்டோ 97 ரன்களும், வார்னர் 52 ரன்களும் எடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி விளையாடி வருகிறது. இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் மயன்ங் அகர்வால் களமிறங்கினர். போட்டியின் 2-வது ஓவரின் 3ம் பந்தை மயங்க் அகர்வால் அடித்துவிட்டு ரன் எடுக்க ஓடினார். பந்தை வார்னர் தவறவிட்டதுபோல் இருந்ததால் 2ம் ரன்னுக்கு கே.எல்.ராகுல் அழைத்தார். உடனே மயன்ங் அகர்வால் 2ம் ரன்னுக்கு ஓடினார். ஆனால் அதற்குள் வார்னர் பந்தை எடுத்து வீசியதால், மயன்ங் அகர்வால் (9 ரன்கள்) எதிர்பாராதவிதமாக ரன் அவுட்டானார். இதனை அடுத்து கே.எல்.ராகுலும் 11 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.
— Cricsphere (@Cricsphere) October 8, 2020
Series of events! #KLRahul #mayank #IPL2020 pic.twitter.com/IxdZ3Z2ioE
— Frank (@FranklinnnMJ) October 8, 2020

மற்ற செய்திகள்
