இந்தியாவுல இப்படி ஒரு பவுலிங்கா..பிரசித் கிருஷ்ணாவை பாராட்டிய ஹிட்மேன் ரோஹித்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமேற்கு இந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறது. 3 ஒருநாள் போட்டிகளிலும் 3 T20 போட்டிகளிலும் இரு அணிகளும் விளையாட இருக்கின்றன. முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றிபெற்றது. இதனையடுத்து கப் யாருக்கு? என்பதை முடிவு செய்யும் போட்டியான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று அகமதாபாத்தில் நடைபெற்றது.
"இதுனால தான் சென்னை BJP ஆபிஸ்ல பெட்ரோல் குண்டு போட்டேன்" .. குற்றவாளி சொன்ன பகீர் காரணம்..!
இந்தியா பேட்டிங்
போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்தது. சூர்யகுமார் யாதவ் 64 ரன்னிலும் கே.எல்.ராகுல் 49 ரன்னிலும், வாஷிங்டன் சுந்தர் 24 ரன்னிலும், தீபக் ஹூடா 29 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப், ஒடியன் ஸ்மித் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. இந்திய பந்துவீச்சாளர்கள் களத்தில் காட்டிய ஆக்ரோஷம் காரணமாக சீரான இடைவெளியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் விக்கெட்டுகள் சரிந்தன.
தொடரை வென்ற இந்தியா
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 46 ஓவரில் 193 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் ஷமார் புரூக்ஸ் 44 ரன்னும், அகேல் ஹொசைன் 34 ரன்னும், ஷாய் ஹோப் 27 ரன்னும், ஒடியன் ஸ்மித் 24 ரன்னும் எடுத்தனர்.இதன் மூலம் 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. அத்துடன் ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது.
இதில் அபாரமாக பந்துவீசிய இந்தியாவின் இளம் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவை புகழ்ந்து தள்ளியிருக்கிறார் ரோஹித் ஷர்மா. இதுபற்றி ரோஹித் பேசுகையில்," சில விஷயங்களை கற்றுக்கொள்வதற்காக ஒன்றிரண்டு போட்டிகளில் தோற்பது குறித்து நாங்கள் கவலைப்படவில்லை. சரியான அணியினை தேர்ந்தெடுப்பது என்னும் நீண்டகால இலக்கினை முன்வைத்து செயல்பட்டுவருகிறோம். சமீப காலங்களில் இப்படியான பந்துவீச்சை இந்தியாவில் பார்த்ததில்லை. பிரசித் கிருஷ்ணா சிறப்பாக பந்துவீசினார். சக பவுலர்கள் அவருக்கு உறுதுணையாக இருந்தனர்" என்றார்.
நேற்றைய போட்டியில் 9 ஓவர்களை வீசிய பிரசித் 12 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
நாசாவின் அடுத்த பிரம்மாண்ட திட்டம்.. விண்வெளி வீரர்களுக்கு வித்தியாச பயிற்சி.. - வைரல் புகைப்படம்..!