VIDEO: யாருங்க சொன்னது ரெண்டு பேருக்கும் சண்டைன்னு.. இந்த வீடியோ பாருங்க தெரியும்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Feb 07, 2022 02:12 PM

வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்ட் அவுட் ஆனதும் விராட் கோலியும், ரோகித் சர்மாவும் கொண்டாடிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

Virat Kohli, Rohit Sharma celebrated Pollard wicket together

VIDEO: பாவங்க மனுசன்.. இப்டி ‘அவுட்’ ஆவோம்னு கொஞ்சம் கூட நெனச்சிருக்க மாட்டாரு.. சோகமாக வெளியேறிய ரிஷப் பந்த்..!

முதல் ஒருநாள் போட்டி

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்தியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 176 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அசத்திய சஹால்

இதில் அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர் 57 ரன்கள் எடுத்தார். இந்திய அணியை பொறுத்தவரை சஹால் 4 விக்கெட்டுகளும், வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளும், பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளும், முகமது சிராஜ் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இந்தியா அபார வெற்றி

இதனை அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி 28 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. இதனால் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 60 ரன்கள் எடுத்தார்.

Virat Kohli, Rohit Sharma celebrated Pollard wicket together

பொல்லார்டு டக் அவுட்

இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்ட் அவுட்டானதும் ரோகித் சர்மாவும், விராட் கோலியும் கொண்டாடிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் 6-வது வீரராக களமிறங்கினார். அப்போது இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர சஹால், போட்டியின் 20-வது ஓவரை வீசினார். அப்போது தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே போல்டாகி பொல்லார்டு வெளியேறினார்.

விராட் கோலி-ரோகித் சர்மா

இதனால் விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் உற்சாகமாக அவரது விக்கெட்டை கொண்டாடினர். பொதுவாக விராட் கோலிக்கும், ரோஹித் சர்மாவுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருவதாக கூறப்படுகிறது. அப்படி உள்ள சூழலில் இருவரும் இணைந்து மகிழ்ச்சியாக பொல்லார்ட்டின் விக்கெட்டை கொண்டாடிய வீடியோ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இதில் ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியில் பொல்லார்டு விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடு புகுந்து பெண்ணுக்கு தாலி கட்ட முயன்ற எதிர்வீட்டு வாலிபர்.. சிக்கிய திருநங்கை.. சென்னையில் அதிர்ச்சி..!

Tags : #INDVWI #VIRATKOHLI #ROHITSHARMA #POLLARD WICKET #வெஸ்ட் இண்டீஸ் #முதல் ஒருநாள் போட்டி #பொல்லார்டு #விராட் கோலி #ரோகித் சர்மா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Virat Kohli, Rohit Sharma celebrated Pollard wicket together | Sports News.