கட்டம் கட்டித் தூக்கிய ரோஹித் ஷர்மா.. கூடவே கோலியும் போட்ட 'ஸ்கெட்ச்' பக்கா.. குழம்பி நின்ற பேட்ஸ்மேன்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith Kumar V | Feb 07, 2022 06:35 PM

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடந்த முதல் ஒரு நாள் போட்டியில், இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது.

rohit sharma captaincy skills to set field video gone viral

'பொல்லார்ட்' வந்ததும் 'கோலி' சொன்ன ரகசியம்.. மறுகணமே மைதானத்தில் நடந்த 'மேஜிக்'.. "வேற லெவல்யா கிங் கோலி"

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி 20 போட்டிகளில் மோதவுள்ளது.

இதன் முதல் ஒரு நாள் போட்டி, இரு அணிகளுக்கும் இடையே நேற்று நடைபெற்றிருந்தது. தென்னாப்பிரிக்க தொடரில், காயம் காரணமாக விலகியிருந்த ரோஹித் ஷர்மா, தற்போது குணமடைந்து மீண்டும் இந்திய அணிக்காக களமிறங்கினார்.

சிக்கித் திணறிய வெஸ்ட் இண்டீஸ்

அது மட்டுமில்லாமல், இந்திய அணியின் ஒரு நாள் மற்றும் டி 20 அணியின் கேப்டனாகவும் ரோஹித் ஷர்மா, களமிறங்கிய முதல் போட்டி இதுவாகும். இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சால், ரன் அடிக்க முடியாமல் திணறியது. இதனால், 176 ரன்கள் மட்டுமே வெஸ்ட் இண்டீஸ் அணி எடுத்தது.

கேப்டன் ரோஹித் ஷர்மா

தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, 28 ஆவது ஓவரில், 4 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து, வெற்றி இலக்கை எட்டிப் பிடித்தது. 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை, இந்திய அணி 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்திய அணியின் 1000 ஆவது ஒரு நாள் போட்டியில் தலைமை தாங்கிய ரோஹித் ஷர்மா, தன்னுடைய முதல் கேப்டன்சியிலேயே, அணி வீரர்களை மிகச் சிறப்பாக கையாண்டுள்ளார்.

ரோஹித் - கோலி

இதற்கு முன்பு, கேப்டனாக இருந்த கோலியுடன் இணைந்து, ரோஹித் எடுத்த பல முடிவுகள், இந்திய அணிக்கு பெரிய நன்மையாக அமைந்தது. அது மட்டுமில்லாமல், ரோஹித் தலைமை பண்பை பலரும் பாராட்டியும் வருகின்றனர். இந்நிலையில், ரோஹித் கேப்டன்சி திறனை நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவம், நேற்றைய போட்டியில் நிகழ்ந்தது.

rohit sharma captaincy skills to set field video gone viral

ஃபீல்டிங் செயல்பாடு

வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, 12 ஆவது ஓவரை வாஷிங்டன் சுந்தர் வீசினார். அதன் முதல் பந்தில், டேரன் பிராவோ சிங்கிள் எடுத்தார். அப்போது, ஸ்கொயர் லெக் திசையில் யாரும் ஃபீல்டிங் செய்யவில்லை. தொடர்ந்து, 2 ஆவது பந்தை வாஷிங்டன் சுந்தர் வீசுவதற்கு முன்பாக, மிட் விக்கெட் மற்றும் ஸ்கொயர் லெக் பகுதியில் இரண்டு ஃபீல்டர்களை ரோஹித் ஷர்மா நிறுத்தினார்.

சிறப்பான விக்கெட்

இந்த சமயத்தில், வெஸ்ட் இண்டீஸ் ப்ரெண்டன் கிங், பேட்டிங் பக்கம் நின்றார். அதே போல, வாஷிங்டன் சுந்தரிடம் ஸ்லோ பால் போடச் சொல்லியுள்ளார் ரோஹித் ஷர்மா. அவரும் அப்படியே செய்ய, பந்தினை எதிர்கொண்ட ப்ரெண்டன் கிங் எதிர்பார்த்ததை விட, பந்து மெதுவாக வந்தது. இதனால், அவர் டைமிங்கை தவற விட, பேட்டில் சரியாக படாமல், மிட் விக்கெட் திசையில் நின்று கொண்டிருந்த சூர்யகுமார் யாதவிடம் கேட்ச் ஆக மாறியது.

தக்க பதிலடி

இதனால், பேட்ஸ்மேன் திகைத்து போய் விட்டார். ரோஹித் சரியாக கட்டம் கட்டி, விக்கெட் விழ வைத்ததற்கு, கோலியும் பீல்ட் செட்டிங்கில் அதிகம் உதவி செய்துள்ளார். அதே போல, இருவரும், பல முறை பீல்டிங் சரியாக இருக்கிறதா என்பதை பார்த்து விட்டு, சிறப்பாக செட் செய்து ஆடினர்.

ரோஹித் - கோலி இடையே மோதல் இருப்பதாக அதிகம் வதந்தி பரவி வந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரே போட்டி, அப்படி எதுவுமே இருவருக்குள்ளும் இல்லை என்பதை உறுதி செய்து, வதந்தி பரப்பியவர்களுக்கு தக்க பதிலடியை கொடுத்துள்ளது.

நீ டிரெஸ் போடாம இருக்குற ஃபோட்டோஸ் என்கிட்ட இருக்கு.. தொழிலதிபரை கூல்டிரிங்க்ஸ் குடிக்க வைத்து.. இளம்பெண் போட்ட திட்டம்

Tags : #ROHIT SHARMA #CAPTAINCY #ரோஹித் ஷர்மா #இந்தியா #வெஸ்ட் இண்டீஸ்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Rohit sharma captaincy skills to set field video gone viral | Sports News.