இப்டி பேசுறவங்கள என்ன தான் பண்றது??.. கோலி - ரோஹித் விவகாரம்.. கடுப்பான சுனில் கவாஸ்கர்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith Kumar V | Feb 07, 2022 11:57 PM

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி வெற்றிகரமாக தொடங்கி அசத்தியுள்ளது.

sunil gavaskar slams on rumours about virat kohli and rohit rift

3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி 20 போட்டிகளில் ஆடுவதற்காக, பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்தியா வந்தடைந்தது.

முதலாவதாக ஒரு நாள் தொடர் நடைபெற்று வரும் நிலையில், இதன் முதல் போட்டி நேற்று நடைபெற்றிருந்தது. ஒரு நாள் போட்டியில், இந்திய அணி ஆடும் 1000 ஆவது போட்டி என்ற பெருமையுடன், ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி களம் கண்டது.

அசத்தல் கேப்டன் ரோஹித்

அவர் கேப்டனாக அறிவிக்கப்பட்ட பிறகு, தலைமை தாங்கும் முதல் ஒரு போட்டி என்ற நிலையில், எந்தவித தடுமாற்றமும் இன்றி, மிகச் சிறப்பாக கேப்டன்சி செய்திருந்தார் ரோஹித் ஷர்மா. பவுலிங் ரொட்டேஷன், ஃபீல்டிங் நிறுத்துவது என அனைத்தையும், மிக அசத்தலாக கையாண்டிருந்தார். இதனால், இந்திய அணியின் பந்து வீச்சில் சிக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 176 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியும் பெற்றிருந்தது. பேட்டிங்கிலும் ரோஹித் ஷர்மா கை கொடுக்க, இந்திய அணி எளிதில் வென்றது. முன்னதாக, இந்த போட்டியில் அனைத்தையும் விட சிறப்பான ஒரு சம்பவம் நடந்தது.

ரோஹித் - கோலி

ரோஹித் ஷர்மாவிற்கு முன்பு, இந்திய அணியை வழி நடத்தி வந்த விராட் கோலி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில், புது கேப்டன் ரோஹித் ஷர்மாவிற்கு, மிகப் பெரிய பக்கபலமாக இருந்தார். ஃபீல்டிங் நிறுத்துவதில் தொடங்கி, அனைத்து விதமான காரியங்களிலும், தன்னுடைய முழு பங்களிப்பை ஒரு தலைவனாக, தனது அணிக்கு கோலி கொடுத்தார்.

இணையத்தில் வைரல்

கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் சேர்ந்து திட்டம் போடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் அதிகம் வைரலாகி, ரசிகர் மத்தியில் அதிகம் லைக்குகளை அள்ளிக் குவித்தது. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், கோலி மற்றும் ரோஹித் பற்றி, சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

உண்மை என்ன?

'ரோஹித் மற்றும் கோலி ஆகியோர், இந்திய அணிக்காக தான் ஆடுகிறார்கள். அந்த இரண்டு வீரர்களுக்கு இடையே நல்ல புரிதல் இல்லை, மோதல் இருக்கிறது என நீங்கள் கூறுவது அனைத்தும் ஊகங்கள் தான். ரோஹித் - கோலி இடையே மோதல் என பல காலமாகவே ஒரு பேச்சு இருந்து வருகிறது. ஆனால், அவர்கள் இருவருமே இதைப் பற்றி கண்டு கொள்வதில்லை. ஏனென்றால், உண்மை என்ன என்பது அவர்களுக்கு தெரியும்.

யூகம்

அதே போல, அணியில் இருக்கும் கேப்டன், புது கேப்டன் வரும் போது, அவர் வெற்றி பெறக் கூடாது என நினைப்பதாகவும் ஒரு யூகம் உள்ளது. அது முழுக்க முழுக்க முட்டாள் தனமானது ஆகும். அப்படி நினைக்கும் வீரர் ரன் எடுக்கவில்லை என்றாலோ, விக்கெட் எடுக்கவில்லை என்றாலோ அணியில் இருந்து வெளியேறவும் வாய்ப்புள்ளது.

சுனில் கவாஸ்கர் பதிலடி

கேப்டன் பதவியிலிருந்து விலகிய ஒருவர், சிறப்பாக ஆடவில்லை என்றால், அவரை வெளியேற்ற தான் செய்வார்கள். எனவே, இது போன்ற பேச்சை உருவாக்குபவர்கள் எல்லாம், சிறப்பாக செய்ய எதுவும் இல்லாதவர்கள். அவர்கள் தான், இது போன்ற கதைகளை உருவாக்க முயற்சிக்கிறார்கள்' என கோலி - ரோஹித் இடையே மோதல் என தொடர்ந்து பேசி வருபவர்களுக்கு, சுனில் கவாஸ்கர் அவருடைய ஸ்டைலில் தக்க விமர்சனத்தினை கொடுத்துள்ளார்.

நிரூபணம்

சுனில் கவாஸ்கர் சொன்னது போலவே, கோலி - ரோஹித் இடையே பல ஆண்டுகளாக மோதல் இருப்பதாக ஒரு வதந்தி பரவி வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக முதல் ஒரு நாள் போட்டியில், இருவரும் செயல்பட்ட விதம், அப்படி எங்களுக்குள் எதுவும் இல்லை என்பதை தான் நிரூபித்துக் காட்டியுள்ளது.

Tags : #VIRATKOHLI #ROHIT SHARMA #SUNIL GAVASKAR #ரோஹித் ஷர்மா #விராட் கோலி #சுனில் கவாஸ்கர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Sunil gavaskar slams on rumours about virat kohli and rohit rift | Sports News.