VIDEO: அட்வைஸ் பண்ண வந்த கோலியை அலட்சியம் செய்தாரா ரோஹித்..? சர்ச்சையை கிளப்பிய போட்டோ.. உண்மை என்ன..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவிராட் கோலி ஆலோசனை வழங்க வந்தபோது, ரோஹித் ஷர்மா அலட்சியப்படுத்தியதாக புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்தியா அபார வெற்றி
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 176 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த இந்தியா 28 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
முழுநேர கேப்டனாக முதல் போட்டி
விராட் கோலி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய பின், ஒருநாள் அணிக்கான கேப்டானாக ரோஹித் ஷர்மா நியமிக்கப்பட்டார். இப்போட்டிதான் முழுநேர கேப்டனாக ரோஹித் ஷர்மாவுக்கு முதல் போட்டி. அதனால், அவர் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. கேப்டன் பதவி இல்லாமல் ரோஹித் ஷர்மா தலைமையில் விராட் கோலி விளையாடும் முதல் போட்டி என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
ஆலோசனை வழங்கிய விராட் கோலி
அதற்கு காரணம், விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா இடையில் மறைமுக சண்டை இருப்பதாக தொடர்ந்து செய்திகள் உலாவிக் கொண்டு இருக்கின்றன. ஆனால், இவை எல்லாம் பொய் என்பது போலதான் இருவரும் களத்தில் செயல்பட்டனர். குறிப்பாக பந்துகள் சிறப்பாக சுழன்றபோது விராட் கோலி, சுழற்பந்து வீச்சாளர் சஹாலுக்கு ஆலோசனை வழங்கி வந்தார். அதேபோல் ரோஹித் ஷர்மாவிடமும் பீல்டிங் செட் செய்வது குறித்து பேசி வந்தார்.
டக் அவுட்டான பொல்லார்டு
இந்த ஆலோசனையை ரோஹித் ஷர்மாவும் சிரித்த முகத்துடன் கேட்டுக்கொண்டு செயல்பட்டார். இதனால் இந்திய அணியால் அடுத்தடுத்து விக்கெட்களை வீழ்த்த முடிந்தது. குறிப்பாக பொல்லார்ட் களத்திற்குள் வந்தபோது, சஹாலிடம் சென்று சில அறிவுரைகளை விராட் கோலி வழங்கினார். அதன்படி சஹால் வீசிய ஓவரில் பொல்லார்டு கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறினார். உடனே ரோஹித் ஷர்மாவும், விராட் கோலியும் பொல்லார்டின் விக்கெட்டை மகிழ்ச்சியாக கொண்டாடினர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
கோலியை அலட்சியப்படுத்தினாரா ரோஹித்?
இந்த நிலையில் ஹேசன் ஹோல்டர், பாபியல் ஆலன் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்து ஸ்கோரை மெல்ல உயர்த்தினர். இது இந்திய அணிக்கு தலைவலியாக அமைந்தது. அப்போது ரோஹித் ஷர்மாவிடம் பீல்டிங் செட் செய்து குறித்து விராட் கோலி ஆலோசனை வழங்க வந்தார். ஆனால் அவரை தடுத்து நிறுத்தி ரோஹித் ஷர்மா அலட்சியப்படுத்தியதாக புகைப்படங்கள் இணையத்தில் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையானது.
— Aditya ❤️ (@AdityaLipane) February 6, 2022
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ரசிகர்கள்
ஆனால், சாதாரணமாக நடந்த விஷயத்தை சிலர் தேவையில்லாமல் சர்ச்சையாக்கி உள்ளதாக ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். மேலும் விராட் கோலியிடம் ரோஹித் ஷர்மா பேசிய வீடியோவையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்
