"கண்ணுங்களா... அந்த 'கப்'ப எடுத்து வைங்க,.." எந்தவித பரபரப்பும் இல்லாமல் தனிக்காட்டு 'ராஜா'வாக மாஸ் காட்டிய 'மும்பை' இந்தியன்ஸ்!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு13 ஆவது ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய நிலையில், டெல்லி அணியை எளிதாக வீழ்த்தி மும்பை அணி ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை தட்டிச் சென்றுள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி, பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில், 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 65 ரன்களும், ரிஷப் பண்ட் 56 ரன்களும் எடுத்தனர்.
பின்னர் இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி, ஆரம்பம் முதலே அதிரடியால் அமர்க்களப்படுத்தியது. இதனால், போட்டியில் எந்த வித பரபரப்பும் ஏற்படாமல் மும்பை அணி எளிதாக வெற்றியை ருசித்து ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ளது. இந்த சீசனில் பெரிய அளவில் ஜொலிக்காமல் இருந்து வந்த மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மா, இறுதி போட்டியில் 68 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தார்.
இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி தொடர்ச்சியாக இரண்டு முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ளது. அது மட்டுமில்லாமல், Even எண் வரும் ஆண்டுகளில் மும்பை அணி கோப்பையை கைப்பற்றியதில்லை என்றிருந்த கருத்தை இன்று மும்பை அணி மாற்றி மகத்தான சாதனை படைத்துள்ளது.