"இதென்னடா 'RCB' 'டீம்'க்கு வந்த சோதன,,." 'பெங்களூர்' 'டீம்'க்கும் 'கப்' ஜெய்க்குற 'டீம்'க்கும் உள்ள 'CONNECTION'... "ஒரு வேள நடந்துருமோ??..."
முகப்பு > செய்திகள் > விளையாட்டு13 ஆவது ஐபிஎல் சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஐபில் கோப்பைக்கான இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

இரு அணிகளுமே சமமான பலத்துடன் விளங்கும் நிலையில், இந்த சீசனில் மும்பை அணியை ஒரு முறை கூட டெல்லி அணி வென்றதில்லை. இதனால் இன்றைய போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி முதல் முறையாக கோப்பையை கைப்பற்றும் நோக்கில் டெல்லி அணி உள்ளது.
மறுபக்கம் மும்பை அணி ஐந்தாவது முறையாக கோப்பையை கைப்பற்றி சாதனை படைக்கும் முனைப்புடன் களமிறங்கவுள்ளது. ஆனால், இந்த முறை டெல்லி அணியே வெற்றி பெறும் என அதிகம் பேர் கணித்துள்ளனர். அதற்கு காரணம் என்ன என்பதை பார்ப்போம்.
பொதுவாக, பெங்களூர் அணியில் இருந்து ஒரு வீரர் விலகி அடுத்த ஆண்டு எந்த அணிக்காக அவர் ஆடுகிறாரோ பெரும்பாலும் அந்த அணியே கோப்பையை கைப்பற்றும். கடந்த 2014 ஆம் ஆண்டு பெங்களூர் அணியில் இருந்து விலகிய பார்தீவ் படேல் 2015 ஆம் ஆண்டு மும்பை அணிக்காக ஆடிய போது அந்த அணி கோப்பையை கைப்பற்றியது.
2017 ஆம் ஆண்டில் வாட்சன் பெங்களூர் அணியில் இருந்த நிலையில், 2018 ஆம் ஆண்டில் சென்னை அணிக்காக அவர் களமிறங்கிய போது சென்னை அணி கோப்பையைக் கைப்பற்றியிருந்தது. அதே போல 2018 ஆம் ஆண்டு டி காக் பெங்களூர் அணியில் இருந்தார். அதற்கு அடுத்த ஆண்டில், மும்பை அணிக்காக டி காக் களமிறங்கிய நிலையில், மும்பை கோப்பையை கைப்பற்றியிருந்தது.
இந்நிலையில், கடந்த ஐபிஎல் சீசனில் பெங்களூர் அணியில் இடம்பெற்றிருந்த ஸ்டியோனிஸ், ஹெட்மயர் ஆகியோர் இந்த முறை டெல்லி அணியில் இடம்பெற்றிருந்ததை வைத்து டெல்லி தான் கோப்பையை வெல்லும் என பலர் கணித்து வருகின்றனர். கடந்த போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக ஸ்டியோனிஸ், ஹெட்மயர் ஆகியோர் சிறப்பாக ஆடி வெற்றிக்கு வழி வகுத்தனர்.
பெங்களூர் அணி இதுவரை ஒருமுறை கூட கோப்பையை கைப்பற்றாத நிலையில், அந்த அணியில் இருந்து விலகிச் செல்லும் வீரர்களின் அணி வெற்றி பெறுவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
