"இத்தன வருஷத்துல இது தான் முதல் தடவ... இன்னும் ஒரே ஒரு 'STEP' தான்,,." 'த்ரில்லிங்' போட்டியில் பட்டையை கிளப்பிய 'டெல்லி' அணி!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு13 ஆவது ஐபிஎல் சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இரண்டாவது குவாலிஃபையர் சுற்றில் டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதிய போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்று முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது. டெல்லி அணியை சேர்ந்த ஷிகர் தவான் 78 ரன்களும், ஹெட்மையர் 42 ரன்களும், ஸ்டாய்னிஸ் 38 ரன்களும் எடுத்தனர்.
பின்னர் கடின இலக்கை நோக்கி ஆடிய ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர் 2 ரன்களில் நடையைக் கட்டினார். தொடக்கத்தில் சில முக்கிய விக்கெட்டுகள் சரிந்தாலும், வில்லியம்சன் மட்டும் சிறப்பாக ஆடி ரன்கள் குவித்தார். அவருடன் களத்தில் நின்ற சமத்தும் அதிரடியாக ஆடினார்.
ஆட்டத்தின் 17 ஆவது ஓவரில் வில்லியம்சன் அவுட்டாக மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. 3 ஓவர்களுக்கு 42 ரன்கள் தேவை என்ற நிலையில், சமத் மற்றும் ரஷித் கான் ஆகியோர் களத்தில் இருந்தனர். இதனைத் தொடர்ந்து, 19 ஆவது ஓவரில் சமத், ரஷித், கோஸ்வாமி ஆகியோர் அடுத்தடுத்து பந்துகளில் அவுட்டாக, டெல்லி அணியின் வெற்றி உறுதியானது.
20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 172 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், டெல்லி அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ளது. டெல்லி அணி வரும் 10 ஆம் தேதி மும்பை அணியை இறுதிப் போட்டியில் சந்திக்கவுள்ளது.

மற்ற செய்திகள்
