"மஹாபிரபு நீங்க இங்கயும் வந்துட்டீங்களா??.." மீண்டும் சிக்கிய 'கம்பீர்'... வெச்சு செஞ்ச 'நெட்டிசன்'கள்!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith | Nov 10, 2020 10:40 PM

ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தற்போது மோதி வருகின்றன.

fans troll gautam gambhir picking marcus stionis as captain

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது. இலக்கை நோக்கி ஆடி வரும் மும்பை அணி மிகச் சிறப்பாக ஆடி வருகின்றது. இதனிடையே, இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸின் முதல் பந்திலேயே டெல்லி அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

போல்ட் வீசிய பந்தில் ஸ்டியோனிஸ் ரன் எதுவும் எடுக்காமல், டி காக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்த போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர், இன்றைய போட்டியில் ஸ்டியோனிஸ் சிறப்பாக ஆடுவார் என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். கடந்த சில போட்டிகளில் ஸ்டியோனிஸ் சிறப்பாக ஆடியதை வைத்துத் தான் கம்பீர் அப்படி கணித்திருந்தார். ஆனால், அவர் முதல் பந்திலேயே ஆட்டமிழந்த நிலையில், கம்பீரை பலர் ட்ரோல் செய்து வருகின்றனர். 

 

தற்போது மட்டுமில்லாமல், இதற்கு முன்னரும் கம்பீர் கூறுவதற்கு மாறாக தான் பல போட்டிகளில் நிகழ்ந்துள்ளது. உதாரணத்திற்கு, பிளே ஆஃப் சுற்றில் டெல்லி மற்றும் மும்பை அணிகள் மோதிய போது, ரோஹித் ஷர்மா சதமடிக்க கூட வாய்ப்புண்டு என கம்பீர் தெரிவித்திருந்தார். ஆனால் , அந்த போட்டியில் ரோஹித் ஷர்மா டக் அவுட் ஆகினார்.

 

கம்பீர் சொல்வதற்கு நேர் மாறாக பெரும்பாலும் நிகழ்ந்து வருவதால், அவரை நெட்டிசன்கள் அதிகம் கலாய்த்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Fans troll gautam gambhir picking marcus stionis as captain | Sports News.