'டிவில்லியர்ஸ்' அடித்த பந்துடன் போஸ் கொடுத்த குட்டி 'ஃபேன்'... அதுக்கு 'பெங்களூர்' சொன்ன பதில் தான் 'ஹைலைட்டே'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை மிக எளிதாக வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அசத்தல் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் பெங்களூர் அணி வீரரான Mr. '360' எனப்படும் டிவில்லியர்ஸ், பந்துகளை நாலாபுறமும் பறக்க விட்டார். சிக்ஸர் மழைகளை அவர் பொழிந்த நிலையில், கொல்கத்தா அணி பந்து வீச்சாளர் நாகர்கோட்டி வீசிய ஒரே ஓவரில் 2 சிக்ஸர்களை அடித்தார்.
டிவில்லியர்ஸ் அடித்த இந்த 2 சிக்ஸர்களும் மைதானத்தை தாண்டி, வெளியே உள்ள பிராதன சாலை ஒன்றில் சென்று விழுந்தது. அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த இரண்டு கார்கள் மீதும் பந்து பட்டது. இந்நிலையில், அவர் மைதானத்திற்கு வெளியே அடித்த 2 பந்துகளில் ஒன்று சிறுவன் ஒருவன் கையில் கிடைத்துள்ளது. அந்த பணத்துடன் சிறுவன் புகைப்படம் வெளியிட, அதனை பெங்களூர் அணியும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது.
Save that ball, kid. It’s going to be worth a lot one day. #ThatABSix 😉#PlayBold #IPL2020 #WeAreChallengers #Dream11IPL pic.twitter.com/IzPrzhPMhG
— Royal Challengers Bangalore (@RCBTweets) October 13, 2020
அதில், 'அந்த பந்தினை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், ஒரு நாள் அந்த பந்து அதிக மதிப்புடன் இருக்கும்' எனவும் பெங்களூர் அணி குறிப்பிட்டுள்ளது. இந்த சீசனில் சிறப்பாக ஆடி வரும் பெங்களூர் அணி, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற அதிக வாய்ப்புள்ள நிலையில், முதல் முறையாக பெங்களூர் அணி கோப்பையை கைப்பற்றுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
