"இப்படி பந்து வீசுனா.. வேற கேப்டன் கூட விளையாடட்டும்".. தல தோனி கொடுத்த வார்னிங்.. வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Madhavan P | Apr 04, 2023 12:59 PM

சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த போட்டியில் பவுலர்களுக்கு தோனி கொடுத்த எச்சரிக்கை தான் கிரிக்கெட் உலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

MS Dhoni warning to CSK Bowlers for giving Extras in LSG Match

Images are subject to © copyright to their respective owners.

கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது ஐபிஎல் தொடர். கடந்த வருடத்திலிருந்து பத்து அணிகள் இந்த தொடரில் பங்கேற்று வருகின்றன. அதன்படி சில தினங்களுக்கு முன்னர் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் அட்டவணை வெளியிடப்பட்டது. மார்ச் 31ஆம் தேதி துவங்கிய ஐபிஎல் போட்டிகள் டிசம்பர் 28 ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெற இருக்கின்றன. இந்தத் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து குஜராத் அணி விளையாடியது. இதில் குஜராத் வெற்றி பெற்றது.

Images are subject to © copyright to their respective owners.

இதனையடுத்து நேற்று நடைபெற்ற போட்டியில் லக்னோவை எதிர்கொண்டது சென்னை. கிட்டத்தட்ட 4 வருடங்கள் கழித்து சென்னை சேப்பாக்கத்தில் CSK போட்டி நடைபெற்றதால் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் இருந்தனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. ருத்துராஜ் கெய்க்வாட்  - டிவான் கான்வே ஜோடி அபாரமான துவக்கத்தை அளித்தது. பின்னர் வந்த மொயீன் அலி, தூபே தங்களுடைய அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தினர். இறுதியாக களத்திற்கு வந்த தோனி 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு ரசிகர்களை பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

இதன் பலனாக சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 217 ரன்களை குவித்தது. இதனையடுத்து 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது. அந்த அணியின் மேயர்ஸ் - ராகுல் ஜோடி அபாரமான துவக்கத்தை அளித்தாலும் பவர்பிளே-க்கு பிறகு ஆட்டத்தை சென்னை வசம் கொண்டுவந்தார் மொயீன் அலி. சீரான இடைவெளியில் அந்த அணி விக்கெட்டுகளை இழந்தது. இதன் காரணமாக 20 ஓவர் முடிவில் அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களை எடுத்தது. இதன்மூலம் நடப்பு ஐபிஎல் போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

Images are subject to © copyright to their respective owners.

இந்த போட்டியில் சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் சஹார் மற்றும் தேஷ்பாண்டே எக்ஸ்டரா ரன்களை வழங்கினர். நேற்றைய போட்டியில் மட்டும் 13 வைடு, 3 நோபால் வீசியுள்ளனர் CSK அணியின் பந்துவீச்சாளர்கள். போட்டி முடிவடைந்த பிறகு பேசிய தோனி," எங்களது அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் நிறைய எக்ஸ்டரா பந்துகளை வீசினார்கள். இது நிச்சயமாக நல்ல விஷயம் கிடையாது. எதிரணி வீரர்களின் யுக்தியை கண்டுபிடித்து அதற்கு தகுந்தாற்போல பந்துவீச வேண்டும். ஆடுகளத்தின் தன்மையை புரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக நோ பால்களை அவர்கள் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையென்றால் வேறு கேப்டனுக்கு கீழே விளையாட வேண்டிவரும்" என எச்சரித்தார்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by IPL (@iplt20)

Tags : #CSK #MS DHONI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. MS Dhoni warning to CSK Bowlers for giving Extras in LSG Match | Sports News.