ரஜினி போல மாறிய தோனி.. "காக்கி சட்டை, மீசை எல்லாம் பயங்கரமா இருக்கே.." பட்டையை கிளப்பும் 'வீடியோ'

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith Kumar V | Mar 01, 2022 05:50 PM

 இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான டி 20 தொடர் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்ததாக இரு அணிகளுக்கும் இடையே 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளது.

ms dhoni new avatar similiar to rajinikanth promo video gone viral

மனைவி உக்ரைன் பதுங்கு குழியில்.. கணவர் இன்னொரு நாட்டில் பணய கைதி.. புதுமண தம்பதிக்கு நேர்ந்த துயரம்

சர்வதேச போட்டிகளில் இந்திய அணி தொடர்ந்து மாஸ் காட்டி வரும் வேளையில், இன்னொரு பக்கம் ஐபிஎல் போட்டிகளை எதிர்நோக்கியும் ரசிகர்கள் வெயிட்டிங்கில் இருந்து வருகின்றனர்.

மார்ச் 26 ஆம் தேதி, ஐபிஎல் போட்டிகள் ஆரம்பமாகும் என கூறப்பட்டுள்ள நிலையில், இந்த முறை மொத்தம் 10 அணிகள் ஐபிஎல் தொடரில் பங்கேற்கிறது.

ஐபிஎல் போட்டிகள்

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரண்டு புதிய அணிகளுடன், ஏற்கனவே ஐபிஎல் சீசனில் களமிறங்கி வரும் 8 அணிகளும் சேர்ந்து கோதாவில் இறங்குகிறது. இதில், அனைத்து அணிகளும் ஐபிஎல் மெகா ஏலத்தில், சிறந்த வீரர்களைத் தேர்வு செய்து, ஐபிஎல் போட்டிகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

சிஎஸ்கே கேப்டன் தோனி

கடந்த ஐபிஎல் சீசனில் கோப்பையைக் கைப்பற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த முறை ஐபிஎல் ஏலத்தில் யாரும் எதிர்பாராத வகையிலான வீரர்களைத் தேர்வு செய்திருந்தது. அந்த அணியின் கேப்டன் தோனியின் முடிவு, அதிகம் விமர்சனத்தை சந்தித்திருந்தாலும், போட்டி என்று வரும் போது, முடிவு எடுப்பதில் கில்லி என்பதினை நிரூபித்து விடுவார்.

ms dhoni new avatar similiar to rajinikanth promo video gone viral

ஸ்டைலிஷ் வீடியோ

இந்நிலையில், பஸ் டிரைவராக, தோனி நடித்துள்ள ப்ரோமோ வீடியோக்கள், இணையத்தில் அதிகம் ஹிட்டடித்து வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்டைலில் தோன்றும் தோனி, அவரைப் போலவே ஸ்டைலிஷாக தோன்றுகிறார். பார்ப்பதற்கும் அச்சு அசலாக ரஜினிகாந்த் போல இருக்கும் தோனி, காக்கி சட்டை, மீசை, கூலிங் கிளாஸ் என அனைத்தையும் போட்டுக் கொண்டு, பஸ் ஓட்டுநராக தோன்றுகிறார்.

ரஜினி எப்படி கூலிங் கிளாஸை கழற்றி மீண்டும் போடுவாரோ, அதே போல தோனியும் போட்டு, மாஸ் கிளப்பியுள்ளார் ஐபிஎல் ப்ரோமோ வீடியோவாக உருவாக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், இந்த வீடியோக்கள் இணையத்தில் அதிகம் லைக்குகளை அள்ளி வருகிறது.

 

"பக்கத்திலேயே வெடிகுண்டு சத்தம்.. சாப்பாடு, தண்ணி கூட இல்ல.." கதறும் தமிழக மாணவி.. நெஞ்சை பிழியும் வீடியோ கால்

 

Tags : #MS DHONI #NEW AVATAR #SIMILIAR TO RAJINIKANTH #தோனி #காக்கி சட்டை #ரஜினி #ஐபிஎல் போட்டிகள் #சிஎஸ்கே கேப்டன் தோனி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Ms dhoni new avatar similiar to rajinikanth promo video gone viral | Sports News.