என்னது ‘அந்த’ டீம் தோனியை எடுக்க போட்டி போட்டாங்களா? இத்தனை நாளா இது தெரியாம போச்சே.. ரிச்சர்ட் மேட்லி பகிர்ந்த சீக்ரெட்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் ஏலத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி எடுக்க போட்டா போட்டி நடந்ததாக முன்னாள் ஐபிஎல் ஏலதாரர் ரிச்சர்ட் மேட்லி தெரிவித்துள்ளார்.

மனைவி, மருமகளை கொன்றது ஏன்..? கைதான கணவர் அதிர்ச்சி வாக்குமூலம்..!
ஐபிஎல் ஏலம்
ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. தற்போது லக்னோ, அகமதாபாத் என்ற இரு புதிய அணிகள் இணைந்துள்ளது. அதனால் அனைத்து அணியில் உள்ள வீரர்களும் கலைக்கப்பட்டு மெகா ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ளது. வரும் 12, 13 ஆகிய தேதிகளில் ஐபிஎல் ஏலம் நடைபெறுகிறது.
சிஎஸ்கே
அதற்கு முன்னதாக ஒவ்வொரு அணிகளும் தங்கள் அணியில் ஏற்கனவே விளையாடிய 4 வீரர்களை தக்க வைத்துள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி, ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் மொயின் அலி ஆகிய 4 வீரர்களை தக்க வைத்துள்ளது. டு பிளசிஸ், பிராவோ, ஷர்துல் தாகூர், தீபக் சஹார், அம்பட்டி ராயுடு உள்ளிட்ட வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் அனைவரும் ஏலத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.
ஐபிஎல் ஏலதாரர்
இந்த நிலையில் முதன்முறையாக நடந்த ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியை எடுக்க கடும் போட்டி நிலவியாதாக முன்னாள் ஐபிஎல் ஏலதாரர் ரிச்சர்ட் மேட்லி, இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தனது யூடியூப் சேனலில் மேற்கொண்ட நேர்காணல் தெரிவித்துள்ளார்.
தோனி
அதில், ‘தோனியை ஏலத்தில் எடுக்க அணிகளுக்கு இடையே போட்டோ போட்டி இருந்தது. அதில் சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேதான் கடுமையான போட்டி நிலவியது. சென்னை அணிக்கு நட்சத்திர வீரர் ஒருவர் தேவைப்பட்டார். அதனால் தோனியை எடுக்கும் நோக்கத்தில் அந்த அணி நிர்வாகம் உறுதியாக இருந்தது. இறுதியில் 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு தோனியை சென்னை அணி வாங்கியது’ என ரிச்சர்ட் மேட்லி கூறியுள்ளார்.
சிஎஸ்கே
கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இதுவரை சிஎஸ்கே 4 முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
