"ATHARVA THE ORIGIN "- தோனி எடுத்த புதிய அவதாரம்.. மொத்தமா மாறி வேற ஆளா நிக்குறாரே.. ஆடிப் போன ரசிகர்கள்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதன்னுடைய புதிய அவதார் ஒன்றைக் குறித்து, தோனி அறிவித்து வெளியிட்டுள்ள நிலையில், அதனைக் கண்ட ரசிகர்கள் திக்கு முக்காடிப் போயுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணி கண்ட வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவர் எம்.எஸ். தோனி. டி 20 உலக கோப்பை, 50 ஓவர் உலக கோப்பை உள்ளிட்ட பல கோப்பைகளை, இந்திய அணி தோனியின் தலைமையில் வாங்கிக் குவித்துள்ளது.
தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தில் இருந்து கடந்த 2020 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி ஓய்வு முடினை அறிவித்துக் கொண்டார் தோனி.
ஐபிஎல் 2022
இதனைத் தொடர்ந்து, ஐபிஎல் தொடரில் மட்டும் பங்கெடுத்து வரும் தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு, ஐபிஎல் தொடரில், தோனி தலைமையில், நான்காவது முறையாக கோப்பையைக் கைப்பற்றி, சென்னை அணி அசத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து, இந்த முறையும் சிஎஸ்கே அணிக்காக களம் காணவுள்ள தோனி, ஐபிஎல் ஏலம் மற்றும் அணியை கட்டமைப்பதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
தோனியின் அவதார்
இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், புதிய அறிவிப்பு ஒன்றை தோனி தற்போது வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக, தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், 'Atharva The Origin' என்ற கிராபிக்ஸ் நாவல் ஒன்றில், தான் 'அதர்வா' என்ற கதாபாத்திரத்தில் தோன்றப் போவதாக அறிவித்துள்ளார்.
கிராபிக்ஸ் நாவல்
இது தொடர்பான புத்தகம் விரைவில் அமேசான் தளத்தில் விரைவில் முன்பதிவு தொடங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல். இதன் வீடியோவில் தோனியின் கிராபிக்ஸ் புகைப்படம் ஒன்றை, ரசிகர்கள் மிகவும் ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.
பல விளம்பரங்களில் நாம் தோனியை பார்த்த போதும், திடீரென ஒரு கிராபிக்ஸ் கதாபாத்திரமாக நாவலில் தோன்றவுள்ளதால், அவரது ரசிகர்கள் ஆடிப் போயுள்ளனர். அதே வேளையில், இந்த நாவல் வெளிவரும் தினத்தையும் எதிர்நோக்கி காத்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
