குளோப் ஜாமூன் பரோட்டாவா..? என்ன சார் சொல்றீங்க.. வைரலாகும் வினோத டிஷ்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | Mar 01, 2022 04:03 PM

குலாப் ஜாமூன் பரோட்டா. கேட்கும்போதே ஒரு மாதிரியாகத்தான் இருக்கிறது. முழுவதும் இனிப்புடன் மிதக்கும் குளோப் ஜாமூன் எங்க? பிச்சுப் போட்டு சால்னாவை தாறுமாறாக ஊற்றி வேர்க்க விறுவிறுக்க வேட்டையாடத் தோன்றும் பரோட்டா எங்க? என சூரியவம்சம் ஸ்டைலிலும் கேட்கலாம். ஆனால்,இதுதான் இப்போது இணையத்தில் பேசு பொருளாக அமைந்துள்ளது.

Globjamun Parotha Uttar Pradesh dish went viral in internet

Breaking: மைக்ரோசாஃப்ட் CEO சத்யா நாதெள்ளாவின் 26 வயது மகன் உயிரிழப்பு! அதிர்ச்சியில் தொழில்நுட்ப உலகம்..!

கொரோனா காரணமாக, லாக்டவுன் போடப்பட்டதிலிருந்து பல்வேறு மக்கள் புதிய புதிய உணவுகளை செய்தும், உணவகங்களுக்கு சென்று அங்குள்ள பிரத்யேக உணவுகளை சிலாகித்து விமர்சனம் செய்வதை சமூக ஊடகங்கள் வாயிலாக நாமும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

இப்படியான சுவை விரும்பிகள் இரண்டு பேர், உத்திர பிரதேச மாநிலத்தின் ஆக்ரா பகுதியில் தெருவோரம் அமைந்துள்ள கடையில் செய்யப்படும் இந்த குலாப் ஜாமூன் புரோட்டாவை சாப்பிட்டு விட்டு ஸ்டேட்டஸ் போட, அந்த விஷயம் வைரலாகி இருக்கிறது. இப்போது அந்தக் கடையில் செம்ம கூட்டமாம்.

அதென்ன குலாப் ஜாமூன் பரோட்டா?

வழக்கமான குலாப் ஜாமூனை செய்த பின்னர் அதனை, புரோட்டாவின் உள்ளே ஸ்டஃப் செய்கிறார்கள். அதன் பின்னர் பரோட்டாவை வேகவைக்கிறார்கள். அதற்குப் பிறகுதான் முக்கிய கட்டமே.. நம் கையில் கொடுக்கும் போது ஜீரா வை அதில் ஊற்றித் தருகிறார்கள். இதற்கு தனியாக ரசிகர் பட்டாளமே உருவாகி வருகிறது இணையத்தில்.

Globjamun Parotha Uttar Pradesh dish went viral in internet

வீச்சு புரோட்டா, சிலோன் புரோட்டா, பொரிச்ச பரோட்டா என சென்று கொண்டிருந்த சமகால புரோட்டா சரித்திரம் இப்போது குலாப் ஜாமூன் புரோட்டா என்னும் அத்தியாயத்தை எழுத ஆரம்பித்திருக்கிறது.

இந்த புரோட்டாவிற்கு ஒருபக்கம் ரசிகர்கள் அதிகரித்துவரும் நிலையில், நம்மூரிலும் இதனை செய்து பார்க்க பலரும் ஆர்வமாக உள்ளதாக சோசியல் மீடியாவில் தெரிவித்துவருகின்றனர். ஆகவே, இன்னும் சில நாட்களில் நம்மூரிலும் இந்த இனிப்பு புரோட்டாவை சுவைத்துப் பார்க்க மக்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். உத்திர பிரதேத்தில் ஹிட் அடித்த இந்த வினோத புரோட்டாவின் வெற்றி பயணம் தமிழகத்தில் தொடருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

"இனி உங்களோட பிசினஸ் பண்ண மாட்டோம்".. ரஷ்யாவிலிருந்து வெளியேறும் முக்கிய பெட்ரோல் நிறுவனம்..!

Tags : #GLOBJAMUN #PAROTHA #UTTAR PRADESH DISH #குளோப் ஜாமூன் #பரோட்டா #குலாப் ஜாமூன் பரோட்டா

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Globjamun Parotha Uttar Pradesh dish went viral in internet | India News.