HARRY BROOK: யாருப்பா நீ.. 13.25 கோடிக்கு ஏலம் போன இளம் வீரர்.. வாங்க போட்டி போட்ட அணிகள்.. அப்படி என்ன ஸ்பெஷல் இவரு?
முகப்பு > செய்திகள் > விளையாட்டு2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம், இன்று (22.12.2022) கேரளா மாநிலம் கொச்சியில் நடைபெற்று வருகிறது.
Also Read | வில்லியம்சனை தட்டி தூக்கிய IPL அணி.. CSK-க்கு வருவார்னு எதிர்பார்த்தால் இந்த டீம் எடுத்துட்டாங்க!
முன்னதாக, ஐபிஎல் தொடரில் உள்ள 10 அணிகளும் தங்கள் அணியில் தக்க வைத்துக் கொண்ட வீரர்கள் பட்டியலையும், விடுவித்த வீரர்கள் பட்டியலையும் முன்னரே வெளியிட்டிருந்தது.
இந்த ஐபிஎல் ஏலத்தில் இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் ரூ.13.25 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளார். 1.5 கோடி அடிப்படை விலையில் இருந்து ஹாரி புரூக்கை வாங்க ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் இடையே பலத்த போட்டி இருந்தது.
இதனால் ப்ரூக்கின் மதிப்பு ரூ. 13 கோடியைத் தாண்டியது, அந்த நேரத்தில் RR அணி வெளியேறியது. RR அணியிடம் 13.2 கோடி மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது. இறுதியில் 13.25 கோடிக்கு ஹாரி புரூக் ஐதராபாத் அணிக்கு ஏலம் போனார்.
23 வயதான ஹாரி புரூக் 2022 இல் பிரிட்ஜ்டவுனில் நடந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமானார். இங்கிலாந்துக்காக 17 இன்னிங்ஸ்களில், புரூக் 137.77 ஸ்ட்ரைக் ரேட்டில் 26.57 சராசரியுடன் 372 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். ஆஸ்திரேலியாவில் உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியிலும் ஹாரி புரூக் இருந்தது குறிப்பிடத்தக்கது.
புரூக் ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளது இதுவே முதல் முறை. இங்கிலாந்து 19 வயதுக்குட்பட்டோர் அணியின் கேப்டனாக புரூக் செயல்பட்டுள்ளார். 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள புரூக் 3 சதங்களை விளாசியுள்ளார்.
பாகிஸ்தான் பீரிமியர் லீக் தொடரில் 48 பந்துகளில் சதம் அடித்தும் ஹாரி புரூக் அசத்தியுள்ளார்.
Also Read | CSK கூட போட்டி போட்டு மயங்க் அகர்வாலை ஏலத்தில் எடுத்த SRH.. இத்தனை கோடியா!