"ஜித்து ஜில்லாடி பா நீ..." வேற மாதிரி வைரலாகும் 'சுட்டி' குழந்தையின் லேட்டஸ்ட் 'கெட்டப்'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith | Oct 25, 2020 05:25 PM

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் தற்போது மோதி வரும் நிலையில், முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 145 ரன்கள் மட்டும் எடுத்துள்ளது.

csk sam curran latest getup in match against rcb gone viral

இந்த போட்டியில் சென்னை அணியின் இளம் வீரர் சாம் குர்ரான் தலையில் மஞ்சள் நிற பேண்ட் மற்றும் சன் க்ளாஸ் அணிந்து கொண்டு நின்ற புகைப்படங்கள் அதிகம் வைரலானது. சென்னை அணியில் இந்தாண்டு இடம்பெற்றுள்ள இளம் வீரர் சாம் குர்ரானுக்கு அதிக ரசிகர் பட்டாளம் உள்ளது. பேட்டிங், பவுலிங் என ஜொலிக்கும் சாம் குர்ரானை அனைவரும் சுட்டிக் குழந்தை என்றே அழைத்து வருகின்றனர்.  csk sam curran latest getup in match against rcb gone viral

இதனைத் தொடர்ந்து, இன்றைய போட்டியில் சாமின் கெட் அப்பும் அதிக லைக்குகளை அள்ளி வருகிறது. ட்விட்டரில் பலர் சாம் குர்ரான் அணிந்துள்ள கண்ணாடி கோவில் திருவிழாவில் விற்கப்படும் கண்ணாடி போல உள்ளதாகவும், சிலர் சாம் மிகவும் அழகாக தெரிவதாகவும் பல பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Csk sam curran latest getup in match against rcb gone viral | Sports News.