‘18 பந்துகள்.. 2 ரன் இருந்தா ஜெயிச்சிரலாம்’.. ஆனா மரண பயத்தை காட்டிய எதிரணி.. தரமான சம்பவம்!’
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Siva Sankar | May 09, 2019 11:42 AM
ஜெய்பூர் மைதானத்தில் நேற்று நிகழ்ந்த பெண்களுக்கான ரி20 சேலஞ்ச் போட்டியில் 2 ரன்களுக்காக இரண்டு அணிகளுக்கிடையே நிகழ்ந்த படு சுவாரஸ்யமான நிமிடங்கள் பேசப்பட்டு வருகின்றன.

ஸ்மிரிதி மந்தனாவின் கேப்டனிஷிப்பில் ட்ரெயில்பிளேஸர்ஸ் அணியும் மித்தாலி ராஜ் கேப்டனிஷிப்பில் வெலோசிட்டி அணியும் மோதிக்கொண்ட இந்த போட்டியில், ட்ரெயில்பிளேஸர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 112 ரன்கள் எடுத்திருந்தது.
அதன் பின்னர் 113 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களம் இறங்கிய வெலோசிட்டி அணி கடுமையான போராட்டங்களுக்கு பின்னர் முதலில் 24 பந்துகளில் 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற நிலையில் இருந்து, 18 பந்துகளில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற நிலைக்கு நகர்ந்தது. ‘அப்புறம் என்ன? இதுக்கு மேல இந்த மேட்சை பார்த்துதான் முடிவைத் தெரிஞ்சுக்கணுமா?’ என நினைத்துக்கொண்டு ஹாட் ஸ்டாரை க்ளோஸ் பண்ண சென்றபோதுதான் திடீர் எண்ட்ரி கொடுத்தது அந்த ட்விஸ்ட்.
2 ரன் தானே இன்னும் இருக்கு என்று அசால்ட்டாக இருக்க வேண்டாம் வெலோசிட்டி அணி என்ற ட்ரெயில்பிளேஸர்ஸ் அணியின் மைண்ட் வாய்ஸ் கேட்க ஆரம்பித்தது. ஆம், அந்த 2 ரன்களை எடுப்பதற்குள் கேட்ச், ரன் அவுட், போல்டு, டாட், ஸ்டம்பில் பட்டுத் தெறிக்க விட்டது என 18 பந்துகளில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி வெலோசிட்டி அணிக்கு மரண பயத்தை காட்டிய ட்ரெயில்பிளேஸர்ஸ் அணி, தனது அட்டகாசமான ஃபீல்டிங்கினால் வெற்றிக் கனியை ருசித்தது.
வெற்றி பெறுவதற்கான கடைசி கணம் வரை இருக்கும் அசாத்திய நம்பிக்கையே வெற்றிக்கு உந்துகோல் என்பதை இந்த மேட்சை மீண்டும் ஒருமுறை உறுதி செய்ததால், பலரும் இதைப் பற்றி பேசி வருகின்றனர்.
Women’s T20 challenge, Match 2: Velocity beat Trailblazers by 3 wickets. Needing 2 runs to win with 8 wickets in hand, Velocity lost 5 wickets for no run. In the end prevailed. Shefali Verma, 15-year-old, played with confidence and is a star in the making. #WIPL pic.twitter.com/VJcSb9UuJT
— Sarang Bhalerao (@bhaleraosarang) May 9, 2019
