'அப்படி என்னதான் ராசியோ?!!'... 'நடப்பு சீசனில் அந்த டெக்னிக்'... 'WORKOUT ஆகவே மாட்டேங்குது!!!'... 'ஷாக் கொடுக்கும் புள்ளிவிவரம்!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொரோனா பாதிப்பு காரணமாக நடப்பு ஐபிஎல் தொடர் இந்தாண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஐபிஎல் தொடர் என்றாலே பந்துகள் சிக்சருக்கும், பவுண்டரிக்கும் பறக்கும் என்பதால் சேஸிங் செய்யும் அணி மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தும். அதனால் டாஸ் வென்ற அணிகள் கண்ணை மூடிக்கொண்டு சேஸிங்கை தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் இந்த நடப்பு சீசனில் சேஸிங் எடுத்த அணிகள் எல்லாமல் முதலில் தோல்விகளை சந்தித்தன. முதல் 13 போட்டிகளில் டாஸ் வென்று தோல்விகளை சந்தித்தன.
இந்த சீசனில் இதுவரை நடைபெற்ற 40 போட்டிகளில் டாஸ் வென்ற அணி 13 முறைதான் வெற்றி பெற்றுள்ளது. 27 முறை டாஸ் வென்ற அணிகள் தோல்வியை சந்தித்துள்ளன. முன்னதாக 2015ல் 59 போட்டிகளில் 28 வெற்றி, 29 தோல்வி, 2008ல் 58 போட்டிகளில் 28 வெற்றி 30 தோல்வி, 2013ல் 46 போட்டிகளில் 36 வெற்றி, 40 தோல்வி, 2012ல் 75 போட்டிகளில் 33 வெற்றி 41ல் அணிகள் தோல்விகளை சந்தித்துள்ளன.
நடப்பு சீசனில் பஞ்சாப் அணி டாஸ் வென்ற 3 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ள நிலையில், ராஜஸ்தான் 5ல் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. டெல்லி 4ல் ஒன்றிலும், கேகேஆர் 6ல் இரண்டிலும், ஆர்சிபி 5ல் இரண்டிலும், ஹைதரபாத் 7ல் மூன்றிலும், மும்பை 4ல் இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளன.

மற்ற செய்திகள்
