"அஸ்வினுக்கு எதிரா ஆடுறதுனா.. செஸ் விளையாடுறது போல ஆடனும்" - உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன் சொன்ன நச் கருத்து
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியா: பேட்ஸ்மேன்களை மதிப்பிடுவதில் அஸ்வின் மிகவும் திறமையானவர், அதனால்தான் அவரை எதிர்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என ரவிச்சந்திரன் அஸ்வின் குறித்து உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன் மார்னஸ் லாபுஸ்சேக்னே கூறியுள்ளார்.
"ஏன், உன்னால முடியாதா?.." ஷர்துல் செயலால் கடுப்பான ரோஹித்.. "ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆன கேப்டன் போல"
2020-21 பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் போது லாபுஷாக்னே ஆஃப்-ஸ்பின்னர் அஷ்வினை டெஸ்ட் போட்டிகளில் பலமுறை எதிர்கொள்ள வேண்டி இருந்தது, அங்கு இந்தியா வரலாற்று டெஸ்ட் தொடரை வென்றது, மேலும் லாபுஷாக்னே, ஆஃப்-ஸ்பின்னர் அஷ்வினால் இரண்டு முறை ஆட்டமிழந்தார்.
மூத்த இந்திய ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின் பற்றி பேசுகையில், ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் மார்னஸ் லாபுஷாக்னே, "பேட்ஸ்மேன்களை மதிப்பிடுவதில் அஸ்வின் மிகவும் திறமையானவர், அதனால்தான் நான் அவரை எதிர்கொள்வதை ரசிக்கிறேன். நான் சில ஷாட்களை விளையாடும்போது நான் செய்யும் சில விஷயங்களை அவர் கவனித்திருக்கிறார். அஸ்வினிடம் எனக்கு மிகவும் பிடித்தது, அவர் எனக்கு எதிராக அமைக்கும் பீல்டிங் செட்டிங்கை தான்.
நான் அஸ்வினுக்கு எதிராக ரன் எடுக்க ஒவ்வொரு முறையும் கடுமையாக போராட வேண்டி இருக்கும். நாங்கள் இருவரும் போட்டியின் போது ஒரு அட்டகாசமான காய் நகர்த்தல்களில் ஈடுப்பட்டுள்ளோம். ஏறக்குறைய ஒரு சதுரங்க ஆட்டம் போல் மைதானத்தில் உணர்ந்தேன். அஸ்வின் மெல்போர்ன் டெஸ்டில் அழகாக பந்துவீசினார். லெக் ஸ்லிப்பில் சில ஆரம்ப விக்கெட்டுகளை தூக்கினார்". என மார்னஸ் லாபுஷாக்னே கூறியுள்ளார்.
2020-21 பார்டர் கவாஸ்கர் டிராபியின் போது இந்தியாவுக்கு எதிரான SCG ஆட்டத்தைப் பற்றி பேசுகையில், மார்னஸ் லாபுஷாக்னே, தானும் ஸ்டீவ் ஸ்மித்தும் சிட்னியில் பேட்டிங்கிற்கு சிறப்பாக இருந்ததால், தானும் நன்றாக பேட் செய்ததாக கூறினார்.
27 வயதான பேட்ஸ்மேன் மார்னஸ் லாபுஷாக்னே, இந்தியாவில் இந்தியாவுக்கு எதிரான தொடருக்கு முன்பு ஆஸ்திரேலியா அணி சில துணைக்கண்ட சுற்றுப்பயணங்கள் செய்ய உள்ளதாகவும், இந்திய நிலைமைகளுக்கு ஏற்ப தயாராக உள்ளதாகவும் கூறியிருக்கிறார். இது குறித்து மார்னஸ் கூறியது, "இந்தியாவுக்கான எனது அடுத்த பயணத்திற்கு முன் சில துணைக்கண்ட சுற்றுப்பயணங்களை நாங்கள் பெற்றுள்ளோம், அந்த சூழ்நிலைகளில் நான் என்னை நானே சவால் செய்ய முடியும் என்று நம்புகிறேன். என்னிடம் சில தந்திரங்கள் உள்ளன" என மார்னஸ் லாபுஷாக்னே கூறியுள்ளார்.
இந்தியாவுல இப்படி ஒரு பவுலிங்கா..பிரசித் கிருஷ்ணாவை பாராட்டிய ஹிட்மேன் ரோஹித்..!