VIDEO: ‘யார்ரா நீ.. எங்கிருந்துடா புடிச்சாங்க உன்ன’!.. அஸ்வின் யாரை இப்படி சொல்றாரு..? வைரலாகும் ஸ்டம்ப் ‘மைக்’ ஆடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஅஸ்வின் தமிழில் இளம் வீரரை நகைச்சுவையாக பாராட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 202 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் அதிகபட்சமாக நடப்பு கேப்டன் கே.எல்.ராகுல் 50 ரன்களும், அஸ்வின் 46 ரன்களும் எடுத்தனர்.
தென் ஆப்பிரிக்க அணியை பொறுத்தவரை லுங்கி நிகிடி 6 விக்கெட்டுகளும், ரபாடா 3 விக்கெட்டுகளும், மார்கோ ஜான்சன் 1 விக்கெட்டும் எடுத்தனர். இதனைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா அணி தங்களது முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்தது.
ஆரம்பம் முதலே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தென் ஆப்பிரிக்க அணி, இந்திய பவுலர்களுக்கு சோதனை கொடுத்து வந்தது. அதனால் நீண்ட நேரமாக விக்கெட்டை எடுக்க முடியாமல் இந்திய அணி திணறி வந்தது. அப்போது பந்துவீச வந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர், நீண்ட நேரம் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த டீன் எல்கர் மற்றும் கீகன் பீட்டர்சனை அவுட்டாக்கினார்.
இதனை அடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க வீரர்களை தனது அபார பந்துவீச்சு மூலம் தொடர்ந்து அவுட்டாக்கினார். அதனால் ஷர்துல் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 229 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
Just was about to tag you😂😂 pic.twitter.com/WGf0WEL0dP
— Jacob Richard (@jacobrich07) January 4, 2022
இதைப் பார்த்து வியந்து போன இந்திய அணியின் சுழற்பந்து விச்சாளரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான அஸ்வின், ‘யார்ரா நீ.. எங்கிருந்துடா பிடிச்சாங்க உன்னை, நீ பால் போட்டாலே விக்கெட் விழுது’ என நகைச்சுவையாக கூறினார். இது ஸ்டெப் மைக்கில் அப்படியே பதிவானது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
