4 வருஷத்திற்கு பிறகு கம்பேக்.. வந்ததுமே அஸ்வின் செய்த தரமான சம்பவம்.. "நாங்க எல்லாம் அப்போவே அப்படி"
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதென்னாப்பிரிக்கா : சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு, ஒரு நாள் போட்டியில் களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின், முதல் போட்டியிலேயே செய்துள்ள சம்பவம் ஒன்று, தற்போது அதிகம் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே, முதல் ஒரு நாள் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில், தென்னாப்பிரிக்க அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 296 ரன்கள் எடுத்துள்ளது.
அதிகபட்சமாக, வெண்டர் டுசன் 129 ரன்களும், பாவுமா 110 ரன்களும் எடுத்தனர். ஆரம்பத்தில், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய தென்னாப்பிரிக்க அணியை, வெண்டர் டுசன் மற்றும் பாவுமா ஆகியோர் அதிரடியாக ஆடி மீட்டனர்.
மீட்ட பார்ட்னர்ஷிப்
நான்காவது விக்கெட்டுக்கு 204 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடி, இந்திய அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. இதனால், சிறப்பான ஸ்கோரை அந்த அணி இலக்காகவும் நிர்ணயித்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 2 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். தொடர்ந்து, இலக்கை நோக்கி இந்திய அணி தற்போது ஆடி வருகிறது.
அஸ்வின் கம்பேக்
இந்நிலையில், சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு, ஒரு நாள் போட்டியில் களமிறங்கிய அஸ்வின், முதல் போட்டியிலேயே சிறப்பான சம்பவம் ஒன்றைச் செய்துள்ளார். தென்னாப்பிரிக்க வீரர் டி காக்கின் விக்கெட்டை மிக அற்புதமாக எடுத்தார்.
அசத்தல் அஸ்வின்
முன்னதாக, அஸ்வினின் ஓவரில், டி காக்கின் கேட்ச் ஒன்றை ஷ்ரேயஸ் ஐயர் தவற விட்டிருந்தார். ஆனால், இந்த அதிர்ஷ்டம், டி காக்கிற்கு நீண்ட நேரம் கை கொடுக்கவில்லை. அடுத்த சில ஓவர்களில், அதே அஸ்வின் ஓவரில், போல்டு ஆகி வெளியேறினார். டி காக்கை குழப்பக் கூடிய வகையில், பந்து வீசிய அஸ்வின் பற்றி, பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
— Addicric (@addicric) January 19, 2022
இது தொடர்பான வீடியோக்கள், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. பத்து ஓவர்கள் வீசிய அஸ்வின், 53 ரன்கள் மட்டுமே கொடுத்து, ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.