என் கணவரை யாரும் ஏலத்துல எடுக்காததுக்கு காரணம் இதுதான்.. எதுவும் தெரியாம கிண்டல் பண்ணாதீங்க.. பிரபல வீரரின் மனைவி அதிரடி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் ஏலத்தில் வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹசனை எந்த அணியும் எடுக்காதது குறித்து அவரது மனைவி விளக்கம் கொடுத்துள்ளார்.
ஐபிஎல் மெகா ஏலம்
ஐபிஎல் 15-வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் கடந்த 12, 13 ஆகிய தேதிகளில் பெங்களூரில் வைத்து நடைபெற்றது. இதில் அனைத்து அணிகளும் போட்டி போட்டு வீரர்களை ஏலத்தில் எடுத்தனர். குறிப்பாக வெளி நாட்டு வீரர்கள் பலரும் அதிக விலைக்கு ஏலம் போயுனர். ஆனால் வங்கதேச வீரர்கள் பலரை ஏலத்தில் எடுக்க அணிகள் ஆர்வம் காட்டவில்லை.
ஷகிப் அல் ஹசன்
குறிப்பாக வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷகிப் அல் ஹசனை (Shakib Al Hasan) எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. அதனால் நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ் மூலம் சமூக வலைதளங்களில் கிண்டலடித்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவரது மனைவி உம்மே அகமது ஷிஷிர் (Umme Ahmed Shishir) தனது சமூக வலைதளத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.
மனைவி பதிலடி
அதில், ‘ஐபிஎல் மெகா ஏலத்தில் என்ன நடந்தது என்ற தெரியாமல் பலரும் பேசி வருகின்றனர். ஏலத்திற்கு முன்பே 2 அணிகள் என் கணவரை தொடர்பு கொண்டு, இந்த ஆண்டு உங்களால் முழுமையாக ஐபிஎல் தொடரில் விளையாட முடியுமா என்று கேட்டனர். ஆனால் இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் போட்டிகளில் வங்கதேச அணி விளையாட இருப்பதால், முழு தொடரிலும் பங்கேற்க இயலாது என அவர் கூறினார். இதனால்தான் எந்த அணியும் அவரை தேர்வு செய்யவில்லை. இந்த ஆண்டு இல்லை என்றால், அடுத்த ஆண்டு கண்டிப்பாக ஷகிப் அல் ஹசன் விளையாடுவார்.
இலங்கை தொடர்
ஒருவேளை இலங்கை தொடரை அவர் புறக்கணித்துவிட்டு ஐபிஎல் தொடரில் விளையாடி இருந்தால், இதே மாதிரி நீங்கள் பேசுவீர்களா? என் கணவரை தேச துரோகி என்று முத்திரை குத்தி இருப்பீர்கள். உங்களின் தீய ஆசைகள் மீது என் கணவன் தண்ணீர் ஊற்றிவிட்டார். மனித்து கொள்ளுங்கள்’ என பதிவிட்டுள்ளார்.
கொல்கத்தா நைட்ரைடர்ஸ்
வங்கதேச அணியின் முன்னாள் கேப்டனான ஷகிபுல் ஹசன், கடந்த 2011-ம் ஆண்டு முதல் கொல்கத்தா அணிக்காக விளையாடி வருகிறார். 2018-ம் ஆண்டு ஹைதராபாத் அணிக்காக விளையாடி. பின்னர் மீண்டும் கொல்கத்தா அணிக்கே திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.