இணையத்தில் வைரலான 'விராட் கோலி' மகளின் முதல் 'புகைப்படம்'???... கோலியின் சகோதரர் அளித்த 'விளக்கம்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கேப்டன் விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா தம்பதியருக்கு நேற்று பெண் குழந்தை பிறந்திருந்த நிலையில், ரசிகர்கள் அனைவரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், விராட் கோலியின் சகோதரரான விகாஸ் கோலி, இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து இன்ஸ்டாவில் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில் ஒரு குழந்தையின் கால் மட்டும் தெரிவது போல புகைப்படம் ஒன்றையும் இணைத்திருந்தார்.
இதனைக் கண்ட ரசிகர்கள், கோலி - அனுஷ்கா ஷர்மா ஜோடிக்கு பிறந்த பெண் குழந்தையின் முதல் போட்டோ என நினைத்து அனைவரும் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். ஆனால், அது தொடர்பாக விகாஸ் கோலி தன்னுடைய இன்ஸ்டா பதிவில் விளக்கம் ஒன்றை தற்போது அளித்துள்ளார்.
அதில், 'நேற்று விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மாவை வாழ்த்தி நான் போட்டிருந்த பதிவில், இடம்பெற்றிருந்த புகைப்படம் அவர்களின் குழந்தையின் புகைப்படம் அல்ல. அவர்களை வாழ்த்த வேண்டி நான் குறிப்பிட்ட ஒரு ரேண்டம் புகைப்படம் தான். சில ஊடகங்கள் அதனை விராட் கோலியின் குழந்தையின் முதல் புகைப்படம் என செய்தி வெளியிட்டு வருகிறது. அதை தெளிவுபடுத்த தான் இந்த பதிவு' என விளக்கமளித்துள்ளார்.

மற்ற செய்திகள்
