‘தோனி வர வாய்ப்பு இல்லை’!.. ‘அவர் இன்னும் டீம்ல தான் இருக்காரு’! வெளியான புது தகவல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Nov 07, 2019 04:34 PM

இந்தியா-வங்கதேசத்துக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் தோனி வர்ணனையாளராக செயல்படமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

MS Dhoni unlikely to commentate during day night Test

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்றது. இதனை அடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று(07.11.2019) ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் கொல்கத்தாவில் நடைபெற உள்ள இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கு இடையேயான பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் தோனி வர்ணனையாளராக பங்கேற்க உள்ளார் என்ற தகவல் வெளியானது. ஆனால் தோனி கிரிக்கெட்டில் இருந்து இன்னும் ஓய்வு பெறவில்லை. தற்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பிசிசிஐ) ஒப்பந்த வீரராக அவர் இருப்பதால், வர்ணனையாளராக செயல்பட்டால் இரட்டை ஆதாய பதவி குற்றச்சாட்டு வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதனால் தோனி வர்ணனையாளராக பங்கேற்கமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Tags : #MSDHONI #BCCI #CRICKET #COMMENTATE #INDVBAN