மனசுக்குள்ள 'சூரியவம்சம்' தேவயானின்னு நெனைப்பு.. என்னைக்கும் 'மன்னிக்க' மாட்டோம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Nov 09, 2019 01:34 AM

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. தொடர்ந்து 2-வது டி20 போட்டியில் இந்திய அணி வென்றது. இதனால் தற்போது 1-1 என இரு அணிகளும் சம நிலையில் உள்ளன. இந்திய அணியின் முக்கிய பந்து வீச்சாளர்களான புவனேஷ்வர் குமார், பும்ரா, முகம்மது ஷமி ஆகியோர் காயம் காரணமாக ஓய்வு எடுத்து வருகின்றனர்.

7 Fours in 7 Balls, Khaleel Ahmed Becomes The Target Of Trolls

இதனால் இளம் பந்துவீச்சாளர் கலீல் அஹ்மது க்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் மனிதர் தனக்கு கிடைத்த வாய்ப்பை தானே கெடுத்து கொண்டுள்ளார். ஆமாம் முதல் போட்டியின் 19-வது ஓவரில் தொடர்ந்து 4 பந்துகளில் 4 போர்களை வங்கதேசத்துக்கு போனஸாக அளித்தார். இவரின் இந்த தாராள மனப்பான்மையால் வங்கதேச அணி எளிதில் வென்றது.

இந்தநிலையில் மீண்டும் நேற்று நடைபெற்ற டி20 போட்டியில் தான் வீசிய முதல் ஓவரின் 3 பந்துகளில் மீண்டும் போர்களை வாரி வழங்கினார். இந்திய அணியில் மற்ற பந்துவீச்சாளர்கள் சிறப்பாக வீசியும் கலீல் அஹ்மது மட்டுமே படுமோசமாக வீசி இருந்தார். 4 ஓவர்களில் 44 ரன்கள் விட்டுக்கொடுத்து ரன்களை வாரி வழங்கினார்.

மொத்தம் 7 பந்துகளில் 7 போர்களை வாரிவழங்கிய கலீல் அஹ்மதுவை இந்திய ரசிகர்கள் மன்னிக்கவே மாட்டோம் என சமூக வலைதளங்களில் சகட்டுமேனிக்கு திட்டி வருகின்றனர். குறிப்பாக சூரியவம்சம் படத்தில் சரத்குமார்-தேவயானி இருவரும் வாரி வழங்குவது போல ரன்களை வழங்கி இருக்கிறார், பும்ராவை தினமும் 3 முறை கும்பிடணும் என பயங்கரமாக மீம்ஸ்களை வைத்து அவரை வச்சு செய்து வருகின்றனர்.