WATCH VIDEO: உண்மையிலேயே 'விக்கெட்' கீப்பிங் தெரியுமா?.. பண்டை 'வறுத்தெடுத்த' ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Nov 07, 2019 09:22 PM

இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி தற்போது ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட் செய்த வங்கதேச அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ரன்களை எடுத்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக சாஹல் 28 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்தார். வங்கதேச அணியில் மொகமது நைம் 36 ரன்கள் எடுத்தார்.

Twitter trolls Rishabh Pant for his stumping error in Rajkot

முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததால் இந்த போட்டியை வென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. இந்தநிலையில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டின் செயலால் இந்திய ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர்.

போட்டியின்போது 6 வது ஓவரின் முதல் பந்தை சாஹல் வீசினார். வங்கதேச அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் லிட்டன் தாஸ் பந்தை இறங்கிவந்து அடிக்க நினைத்தார். ஆனால் அவரின் பேட்டில் பந்து படவில்லை. அதேநேரம் அந்த பந்து சரியாக பண்டின் கைகளுக்கு வந்தது. ஆனால் பண்ட் முட்டாள்தனமாக பந்து ஸ்டெம்பை தாண்டிவரும் முன்பே பிடித்து ஸ்டெம்பில் அடித்து விட்டார்.

இதனால் அந்த பந்து நோ பாலாக அறிவிக்கப்பட்டது. மேலும் லிட்டன் தாஸுக்கும் மீண்டுமொரு வாய்ப்பு கிடைத்தது. சரியாக அந்த ஓவரில் மேலும் 2 பவுண்டரிகளை லிட்டன் அடிக்க, ரசிகர்கள் ட்விட்டரில் பண்டை வறுத்தெடுத்து வருகின்றனர். தோனிக்கு மாற்று என சொல்லும் பண்டுக்கு விக்கெட் கீப்பிங் குறித்த கிரிக்கெட் விதிகள் தெரியவில்லை என ரசிகர்கள் அவரை திட்டித்தீர்த்து வருகின்றனர்.