போயும் போயும் '1 ரன்னுல' போச்சு.. அதனால.. சென்னை அணியின் 'செம மாஸ்டர்' பிளான்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Manjula | Oct 26, 2019 09:43 PM
ஐபிஎல் அணிகளில் மிகவும் வலுவான ஒரு அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இருந்து வருகிறது. இதுவரை நடந்த ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய எல்லா சீசனிலும் சென்னை அணி பிளே ஆப்புக்குள் சென்றுள்ளது. 2010, 2011, 2018 ஆகிய 3 வருடங்களிலும் சென்னை அணி கோப்பை வென்றது. ஆனால் கடந்த வருடம் 1 ரன்னில் சென்னை அணி மும்பை அணியிடம் கோப்பையை இழந்தது.
இந்தநிலையில் அணியை விரிவுபடுத்த கப்பை மீண்டும் ஜெயிக்க வரும் ஏலத்தில் சென்னை அணி சில வீரர்களை குறிவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் யாரை எல்லாம் சென்னை அணி குறிவைக்கும் என்பதை இங்கே பார்க்கலாம்.
ஜேம்ஸ் நீசம்
கடந்த ஆண்டு ஏலத்தில் இவரின் அடிப்படை விலை 75 லட்ச ரூபாயாக இருந்தது. ஆனால் எந்த அணியும் இவரை ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை. எனினும் உலகக்கோப்பை நடந்து முடிந்தபின் இவரின் மதிப்பு பன்மடங்கு உயர்ந்துள்ளது. நியூசிலாந்து அணி உலகக்கோப்பை வரை செல்வதற்கு இவரும் ஒரு முக்கிய காரணமாக இருந்தார். குறிப்பாக இறுதிப்போட்டியில் இவரது ஆக்ரோஷம் அனைவரையும் கவர்ந்து இழுத்தது. மேலும் இவரது சக நாட்டு வீரர் மிட்செல் சாண்ட்னர் சென்னை அணிக்காக அதிக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதால், நடப்பு ஏலத்தில் சென்னை அணி இவரைத்தட்டி தூக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.
மோர்னே மோர்கல்
சென்னை அணியில் உள்ள வீரர்களில் 90% பேர் 30 வயதை கடந்தவர்களாகவே உள்ளனர். அந்த அடிப்படையில் கொல்கத்தா, ராஜஸ்தான், டெல்லி அணிகளுக்காக விளையாடிய மோர்னே மோர்கலை(35) இந்த முறை சென்னை அணி எடுக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இந்திய ஆடுகளங்களை நன்கு அறிந்தவர் 70 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 77 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதனால் கடந்த சீசனில் 2 போட்டிகள் மட்டுமே விளையாடிய ஸ்காட் கொலீஜனுக்கு மாற்றாக இவர் இருக்க முடியும். இதனால் இந்த முறை இவரை சென்னை அணி எடுக்க ஆர்வம் காட்டும்.
பிரண்டன் கிங்
சென்னை அணிக்கு ஒரு இளம் பேட்ஸ்மேன் தற்போது தேவையாக இருக்கிறார். இதற்கு பிரண்டன் கிங் ஒரு நல்ல சாய்ஸாக இருப்பார். நடந்து முடிந்த கரீபியன் பிரீமியர் லீக்கில் கிங் 12 இன்னிங்ஸ் விளையாடி 496 ரன்களை குவித்தார். வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தொடர்ந்து ஐபிஎல்லில் நல்ல வெற்றிகளை ருசித்து வருகின்றனர். அந்த வகையில் பிரண்டன் கிங்கும் தனது முதல் ஐபிஎல் போட்டியை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருப்பார். இதனால் பார்ம் இல்லாமல் தவிக்கும் டூ பிளசிஸ் இவர் மாற்றாக இருப்பார் என்பதால் சென்னை அணி இவரை ஏலத்தில் எடுக்க அதிக ஆர்வம் காட்டும்.