அவரை தானே 'வீச' சொன்னேன்.. நீங்க 'ஏன்' ஓடி வந்தீங்க?.. கடுப்பான டோனி.. 'ஆங்கிரி' வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Oct 25, 2019 06:04 PM

சென்னை-கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டி கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த சென்னை அணி 157 ரன்களை எடுத்தது. ரன்கள் குறைவு என்பதால் போட்டியை வெல்ல டோனி பல்வேறு திட்டங்களை தீட்டினார்.

CLT20 Mohit Sharma gets rid Yusuf Pathan, Watch Video

அதன்படி போட்டியின் 4-வது ஓவரை ஈஸ்வர் பாண்டே வீச வேண்டும். ஆனால் குழப்பத்தில் மோஹித் பந்துடன் ஓடிவந்தார். இதனைப்பார்த்த டோனி கடுப்பாகி, வேண்டாம் என சைகை காட்ட மோஹித் பந்தை திரும்ப ஈஸ்வரிடம் கொடுக்க சென்றார். ஆனால் பந்துடன் ஓடிவந்து பின்னர் அவர்தான் வீச வேண்டும் என அம்பயர் தர்மசேனா ஸ்ட்ரிக்டாக சொல்லி விட்டார்.

இதைத்தொடர்ந்து மோஹித் மீண்டும் பந்தை எடுத்துக்கொண்டு வீச ஓடிவந்தார். அவர் ஓடிவரும்போது டோனி முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. இதனைப்பார்த்த வர்ணனையாளர்கள் இந்த ஓவரில் ரன்கள் விட்டுக்கொடுக்காமல் இருந்தால் தான் மோஹித், டோனி கோபத்தில் இருந்து தப்பிப்பார் என தெரிவித்தனர்.

ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக மோஹித் அந்த பந்தில் யூசுப் பதானை வீழ்த்தி விட்டார். இதைப்பார்த்த வர்ணனையாளர்கள் ஒவ்வொரு போட்டியிலும் கேப்டன் தான் விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர்களை தேர்வு செய்வார். ஆனால் சின்ஹா போட்டியில் அம்பயர் தேர்வு செய்து விட்டார் என கடுப்பேற்றினர்.

தற்போது இந்த வீடியோவைப் பகிர்ந்து சாம்பியன்ஸ் லீக் போட்டி மீண்டும் வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுக்க, வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுக்கு சிஎஸ்கேவும் பதிலளித்து இருக்கிறது.

Tags : #CSK #IPL