'வர்லாம்.. வர்லாம்.. வா'... சஹலின் பந்துவீச்சில் வில்லியம்ஸை சுருட்டிய வீரர்... 'கேட்ச் மொமண்ட்'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Jul 09, 2019 06:06 PM

உலகக் கோப்பை லீக் போட்டியின் அரையிறுதிப் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கிறன.

Jadeja Catch - Kane Williamson goes for 67, CWC19

இந்த போட்டிகளில் ஜெயிக்கும் அணிதான் ஃபைனலுக்குச் செல்லப் போகிறது என்பதாலேயே, இந்த போட்டிகள் அதிக கவனம் ஈர்க்கப்பட்டுள்ளன. ரசிகர்கள் இந்தியா- நியூஸிலாந்து அணிகளுக்கிடையில் இன்று நிகழும் போட்டியை வைத்த கண்கள் மாறாமல் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

மான்செஸ்டரில் நிகழும் இந்த போட்டியில், டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங்கையும், இந்தியா பந்துவீச்சையும் தேர்வு செய்துகொண்டன. முதல் விக்கெட்டை கேப்டன் கோலி கேட்ச் பிடித்தது அசத்தியதும், அதற்கு அவர் கொடுத்த ரியாக்‌ஷன்களும் ரசிகர்களுக்கு உற்சாகமூட்டியுள்ளது.

இதே போல் குல்தீப் யாதவுக்கு பின், அணியில் சேர்க்கப்பட்டார் சஹல். சஹலின் பந்துவீச்சில் நியூஸிலாந்து சுறா மீன் கேன் வில்லியம்ஸன் 67 ரன்களில் வெளியேறினார். வில்லியம்சன் அடித்த பந்து ஜடேஜா கையில் அகப்பட்டு கேட்ச் ஆனது. இதனால் இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கை அதிகமாகியுள்ளது.

Tags : #ICCWORLDCUP2019 #ICCWORLDCUP #YUZVENDRA CHAHAL #KANEWILLIAMSON #SEMIFINALS