'எங்க' போனாலும் இத 'மட்டும்' விட மாட்றாங்களே... நியூசிலாந்து வீரர்களை 'குழப்ப'... ராகுல்-மணீஷ் செய்த வேலை!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய வீரர்கள் சில நேரம் வெளிநாடுகளில் சென்று விளையாடும்போது ரகசியமாக தங்களது திட்டங்கள் குறித்து பேசுவதற்கு இந்தியை பயன்படுத்துவர். தமிழக வீரர்களான முரளி விஜய், அஸ்வின் உள்ளிட்டோர் விளையாடும் போது தமிழில் பேசுவது வழக்கம். ஸ்டெம்பில் பொருத்தப்பட்டு இருக்கும் மைக்கின் வழியாக இந்த உரையாடல்களை கேட்க முடியும். சமயங்களில் இதுபோன்ற வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாவதும் உண்டு.

இதேபோல கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கே.எல்.ராகுல், மணீஷ் பாண்டே இருவரும் சேர்ந்து விளையாடும்போது தங்களுக்குள் கன்னடாவில் பேசிக்கொள்வது வழக்கம். இந்த பழக்கம் நியூசிலாந்திலும் தொடர்ந்துள்ளது. கடைசி ஒருநாள் போட்டியில் ராகுல்-மணீஷ் சேர்ந்து விளையாடிய போது இருவரும் கன்னடாவில் பேசிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இருவரும் இணைந்து அந்த போட்டியில் 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
