'நம்ம நட்டுவா இது?.. என்ன வேற மாதிரி போடுறாரு?.. 'இது' ரொம்ப ரிஸ்க் ஆச்சே'!.. புது அவதாரம் எடுத்துள்ள யார்க்கர் கிங்!.. பின்னணியில் மாஸ் ப்ளான்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபெங்களூர் அணிக்கு எதிராக நேற்று ஹைதராபாத் அணியில் ஆடும் தமிழக வீரர் நடராஜன் வித்தியாசமாக பவுலிங் செய்தார்.
ஹைதராபாத் மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி நடந்து முடிந்துள்ளது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் இறங்கிய பெங்களூர் அணி முதல் 10 ஓவர்களில் நிதானமாக ஆடியது. அதன்பின் கொஞ்சம் அதிரடி காட்டியது.
இந்த போட்டியில் நடராஜன் பவுலிங் வித்தியாசமாக இருந்தது. இன்று நடராஜன் போட்ட முதல் ஓவரில் 11 ரன்கள் கொடுத்தார். 11 ரன்களை இவர் கொடுத்து இருந்தாலும் கூட பவுலிங் சிறப்பாகவே இருந்தது. இவரின் ஓவரில் நிறைய வெரைட்டி இருந்தது. யார்க்கர் மட்டும் போடாமல் மாற்றி மாற்றி பவுலிங் செய்தார்.
ஸ்லோ பால், கட்டர், ஷார்ட் பால் என்று மாற்றி மாற்றி போட்டார். லென்தை மாற்றி, ஒவ்வொரு பந்திலும் வெரைட்டி காட்டினார். முன்பு இருந்ததை விட நடராஜன் தற்போது புதிதாக நிறைய வேரியேஷன்களை தனது பவுலிங்கில் கற்றுக்கொண்டு இருக்கிறார்.
அவர் வீசிய முதல் ஓவரில் ஒரே ஒரு யார்க்கர் மட்டுமே வீசினார். நடராஜன் தன்னுடைய பலமான யார்க்கர் மீது மட்டும் கவனம் செலுத்தாமல் மற்ற பவுலிங் முறைகளிலும் கவனம் செலுத்தி உள்ளார். இது கொஞ்சம் பெரிய ரிஸ்க். ஆனால், நடராஜனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டால், அவரின் வேரியேஷன்கள் கண்டிப்பாக பெரிய அளவில் கை கொடுக்கும்.
இந்திய அணியின் கோச் ரவி சாஸ்திரிதான் நடராஜனை புதிய வேரியேஷனோடு வீசும்படி கூறினார். தற்போது நடராஜனை அதை முறையாக செய்து வருகிறார். சர்வதேச போட்டிகளில் கண்டிப்பாக நடராஜனுக்கு இந்த வேரியேஷன்கள் கை கொடுக்கும்.
நேற்று நடராஜன் வீசிய 12வது ஓவரில் வெறும் 6 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இந்த ஓவர் முழுக்க வேரியேஷன் காட்டினார். பெங்களூர் அணி அதிரடி காட்டி வந்த நிலையில் ரன் செல்வதை நடராஜனை 12வது கட்டுப்படுத்தி பெங்களூர் அணிக்கு பிரஷர் ஏற்றினார்.