'ஏதாச்சும் ஆடு யா... 16 கோடி... அதுல மண் அள்ளி போட்டுறாத'!.. கண்ணீர் வடிக்காத குறையாக... புலம்பும் ராஜஸ்தான் ராயல்ஸ்!.. சத்திய சோதனை!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுராஜஸ்தான் அணியில் நேற்று ஆடிய கிறிஸ் மோரிஸ் பெரிய அளவில் பவுலிங்கில் ஆதிக்கம் செலுத்தாதது அதிர்ச்சி அளித்துள்ளது.

ராஜஸ்தான் அணியில் 2021 ஐபிஎல் தொடரில் ஆடி வரும் முக்கியமான வீரர் கிறிஸ் மோரிஸ். தென்னாப்பிரிக்காவை சேர்ந்த இவர் உலகம் முழுக்க பல்வேறு லீக் போட்டிகளில் ஆடி வருகிறார்.
ஐபிஎல் தொடரிலும் கூட சென்னை, டெல்லி, பெங்களூர் போன்ற அணிகளில் கிறிஸ் மோரிஸ் ஆடி இருக்கிறார். இந்த வருடம் ராஜஸ்தான் அணியால் இவர் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
2021 ஏலத்தில் பல்வேறு அணிகளிடம் போட்டியிட்டு கிறிஸ் மோரிசை ராஜஸ்தான் அணி எடுத்தது. ஐபிஎல் வரலாற்றில் மிக அதிகபட்சமாக 16.25 கோடி ரூபாய் கொடுத்து இவர் எடுக்கப்பட்டார். டெல்லி, பஞ்சாப், பெங்களூர் என்று பல்வேறு அணிகள் போட்டியிட கடைசியில் ராஜஸ்தான் அணி இவரை ஏலம் எடுத்தது.
ஆனால் ராஜஸ்தான் அணி இவ்வளவு ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்தும் கூட கிறிஸ் மோரிஸ் நேற்றைய போட்டியில் பெரிதாக ஆடவில்லை. நேற்று இவர் போட்ட முதல் இரண்டு ஓவர்கள் மிக மோசமாக இருந்தது. சரியான லைன் மற்றும் லெந்த்தில் போட முடியவில்லை. முக்கியமாக வெரைட்டி இல்லாமல் பவுலிங் செய்தார்.
இவரின் முதல் இரண்டு ஓவரில் கே. எல் ராகுல், தீபக் ஹூடா இரண்டு பேருமே அதிரடியாக ஆடினார். சிக்ஸ், பவுண்டரி என்று தொடர்ச்சியாக அடித்து மோரிஸ்க்கு அதிர்ச்சி அளித்தனர்.
சரியாக யார்க்கர் கூட போட முடியாமல் இவர் நேற்று திணறியது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரிய அளவில் பேசுபொருள் ஆனது. நேற்று இவர் இரண்டு விக்கெட் எடுத்தார். ஆனால் அதில் ஒரு விக்கெட் டெயில் என்டர் விக்கெட். 4 ஓவரில் 41 ரன்கள் கொடுத்தார்.
இவரை ஆல் ரவுண்டர் என்று நம்பி ராஜஸ்தான் அணி 16.25 கோடி ரூபாய் கொடுத்தது. ஆனால் அதற்கான எந்த தடயமும் நேற்று இவரிடம் இல்லை. மோசமான பவுலிங் இவரின் ஃபீல்டிங்கும் அவ்வளவு சிறப்பாக இல்லை. அதோடு இவர் நேற்று 4 பந்துகள் பிடித்து 2 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
ஒரு பந்தில் பவுண்டரி அடித்து இருந்தால் கூட ராஜஸ்தான் வென்று இருக்கும். இவ்வளவு கோடிகளை கொட்டிகொடுத்து இவரை ஏன் எடுத்தோம் என்று ராஜஸ்தான் புலம்பும் அளவிற்கு கிறிஸ் மோரிஸ் ஆட்டம் நேற்று இருந்ததாக கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

மற்ற செய்திகள்
