படிக்க வேண்டிய வயசுல... கிரிக்கெட் ஜாம்பவான்களுக்கு பாடம் எடுத்த வீரர்!.. என்னா அடி!.. ஐபிஎல் உலகம் ஷாக்!.. வாயடைத்துப்போன SRH!.. தரமான சம்பவம்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொல்கத்தாவிற்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியின் இளம் வீரர் ஒருவர் மிகவும் அதிரடியாக ஆடி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

நேற்று கொல்கத்தாவிற்கு எதிராக சென்னையில் நடந்த ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணி தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் தோல்வி அடைந்தாலும் ஹைதராபாத் அணியில் பல முக்கியமான வீரர்கள் ஃபார்மிற்கு திரும்பி உள்ளனர்.
பேர்ஸ்டோ நீண்ட நாட்களுக்கு பின் ஃபார்மிற்கு திரும்பி உள்ளார். அதேபோல் மணீஷ் பாண்டே பார்மிற்கு திரும்பி உள்ளார். ரஷீத் கான் நன்றாக ஆடி வருகிறார்.
இதற்கிடையே, இந்த போட்டியில் ஹைதராபாத் அணி கண்டெடுத்த சூப்பர் ஹீரோ தான் அப்துல் சமத். காஷ்மீரை சேர்ந்த சமத் ஐபிஎல் போட்டிகளில் கடந்த வருடம் அறிமுகம் ஆனார். கடந்த வருடமே சமத் வருகை பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. முதல் தர போட்டிகளில் இவர் நன்றாக ஆடியதால், இவர் மீதான நம்பிக்கை அதிகம் இருந்தது.
19 வயதான சமத் கடந்த வருடமே ஐபிஎல் போட்டிகளில் ஹைதராபாத்திற்காக ஆடி கவனம் ஈர்த்து இருந்தார். முக்கியமாக ஒரு போட்டியில் 33 ரன்கள் எடுத்து நம்பிக்கை கொடுத்தார். அதற்கு முன் 2018, 2019ல் நடந்த முதல் தர போட்டிகளிலும், ரஞ்சி கோப்பை போட்டியிலும், சையது முஷ்டாக் கோப்பை போட்டியிலும் காஷ்மீர் அணியில் தனியாளாக அதிரடியாக ஆடினார்.
நேற்று ஹைதராபாத் அணி பேட்டிங்கில் திணறி வந்தது. முக்கியமாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விஜய் சங்கர், நபி சொதப்பினார்கள். இவர்கள் அவுட் ஆன பின் களமிறங்கிய சமத், ஒரே ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸ் அடித்து அதிரடி காட்டினார். கையை விட்டு போன போட்டியை பிடித்து இழுத்து நிறுத்தினார். அதிலும் வலிமையாக கொல்கத்தா டெத் பவுலிங்கை எளிதாக எதிர்கொண்டார்.
எனினும், இவர் கொஞ்சம் முன்னாதகவே களமிறங்கி இருந்தால் மொத்தமாக ஆட்டமே மாறி இருக்கும். ஹைதராபாத் அணி வெற்றிபெற்று இருக்கும். விஜய் சங்கருக்கும், நபிக்கும் முன்பாக இவர் களமிறங்கி இருந்தால், ஹைதரபாத் அணி கண்டிப்பாக வென்று இருக்கும். இதைத் தொடர்ந்து, இவருக்கு பேட்டிங்கில் புரோமோஷன் வழங்க வேண்டும் என்று இப்போதே ஹைதராபாத் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த போட்டியில் மொத்தம் 8 பந்துகள் பிடித்த சமத் 19 ரன்கள் எடுத்தார். இதில் 2 சிக்ஸ் அடக்கம். நேற்று இவரின் ஸ்டிரைக் ரேட் 234 ஆகும். ஒரே போட்டியின் மூலம் ஒட்டுமொத்த ஐபிஎல்-லயும் இவர் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
தினேஷ் கார்த்திக்குக்கு பிறகு நேற்றைய போட்டியில் அதிக ஸ்டிரைக் ரேட் கொண்ட ஒரே வீரர் இவர்தான். ஹைதராபாத் அணியின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக சமத் உருவெடுத்துள்ளார். அடுத்துவரும் போட்டிகளில் மணீஷ் பாண்டேவுக்கு பின்னர் இவர் களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கணிக்கப்படுகிறது.

மற்ற செய்திகள்
