VIDEO: ‘இப்டி மாட்டிகிட்டயே பங்கு’!.. சுத்தி அவ்ளோ கேமரா இருக்கு ‘டி-சர்ட்’-க்கு உள்ள ஒளிச்சு வச்சா மட்டும் தெரியாதா..? வைரலாகும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியின் போது தென் ஆப்பிரிக்க வீரர் வேன் பில்ஜோன் ஷூவை டி-சர்ட்டுக்குள் ஒளித்து வைத்து விளையாடிய வீடியோ வெளியாகியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது. இந்த நிலையில் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன.
இதன் முதல் போட்டி கடந்த சனிக்கிழமை ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 188 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக மார்க்ராம் 51 ரன்களும், ஹென்ரிச் கிளாசென் 50 ரன்களும் எடுத்தனர்.
இதனை அடுத்து 189 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் அணி, 19.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 189 ரன்களை எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. இதில் அந்த அணியின் முகமது ரிஸ்வான் 74 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த நிலையில் இப்போட்டியின் 14-வது ஓவரில் தென் ஆப்பிரிக்க வீரர் தப்ரைஸ் ஷம்ஸி வீசிய ஓவரில் பாகிஸ்தான் வீரர் முகமது ஹபீஸ் அவுட்டானார். உடனே தனது ஷூவை கழற்றிய தப்ரைஸ் ஷம்ஸி, செல்போனில் பேசுவது போல முகமது ஹபீஸை கிண்டல் செய்தார்.
— 2 Slips and a Gully (@srikar_st) April 11, 2021
இதனை அடுத்து அவர் ஷூவை கீழே போட்டதும், சக வீரர் வேன் பில்ஜோன் விளையாட்டாக தனது டி-சர்ட்டுக்குள் ஷூவை ஒளித்து எடுத்துச் சென்றார். ஆனால் இது கேமாராவில் அப்படியே பதிவானது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
