'ரோகித்த எப்படி நீங்க அந்த மாதிரி சொல்லலாம்?.. ரெண்டுல ஒன்னு தெரிஞ்சு ஆகணும்'!.. இணையத்தில் வெடித்த போர்!.. பதறிப்போன SWIGGY!.. பகிரங்க மன்னிப்பு!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா குறித்து ஸ்விகி (Swiggy) நிறுவனம் விளையாட்டாக பதிவு செய்த ட்வீட் தற்போது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது.
ஐபிஎல் 2021 தொடரின் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார் ரோகித் சர்மா.
இந்த தொடரின் முதல் போட்டியில் ஆர்சிபி அணியிடம் மும்பை இந்தியன்ஸ் அணி தோற்றுள்ளது. எனினும் இந்த தொடரை வெற்றி கொண்டு ஹாட்ரிக் கோப்பையை தூக்க அணி முனைப்பு காட்டி வருகிறது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஐபிஎல்லில் 5 முறை கோப்பையை வென்றுள்ளார். அணியின் ஹாட்ரிக் கோப்பைக்கான தீவிரத்துடன் இந்த தொடரை எதிர்கொண்டுள்ளார். முதல் போட்டியில் ஆர்சிபி அணியுடன் விளையாடி மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியடைந்தாலும் தொடர்ந்து வெற்றிக்கான முனைப்பில் உள்ளார் ரோகித்.
ஆனால் இந்திய அணியின் குறைந்த ஓவர்கள் போட்டிகளில் துணை கேப்டனான ரோகித் சர்மாவின் பிட்னஸ் எப்போதும் கேலிக்குள்ளாகி வருகிறது. ஒரு சிறப்பான விளையாட்டு வீரருக்கான பிட்னஸ் அவரிடம் இல்லை என்பதை அடிக்கடி அனைவரும் விமர்சித்து வருவது வழக்கம். இதற்கிடையே, தற்போது அந்த விஷயத்தை கையில் எடுத்து வாங்கிக் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது ஆன்லைன் மூலம் உணவு விற்பனை செய்யும் ஸ்விகி (Swiggy).
ரோகித் மகாராஷ்டிராவின் வடா பாவை சாப்பிடுவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு இது போட்டோஷாப் இல்லை எண்ணும்படியாக கமெண்ட் செய்து, அதை உடனடியாக நீக்கியும் இருந்தது ஸ்விகி.
ஆனால், அதற்குள்ளாகவே ஸ்விகியை சமூகவலைதளங்களில் வறுத்தெடுக்க துவங்கி விட்டனர் ரசிகர்கள். இது ஒரு மோசமான விளம்பரம் என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதை விளையாட்டாகவே செய்திருந்தது ஸ்விகி. ஆனால், ஸ்விகியை புறக்கணிப்போம் என்ற ஹாஷ்டேக் தற்போது ட்விட்டரில் ட்ரெண்ட்டாகி வருகிறது.
மும்பை அணியின் மேட்ச் வின்னரை ஸ்விகி அவமரியாதை செய்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். ரோகித் மட்டுமின்றி யாராக இருந்தாலும் இதுபோன்ற கமெண்ட்டை ஸ்விகி செய்திருக்கக்கூடாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இதுபோன்ற ஒரு கமெண்ட்டை ஸ்விகியிடமிருந்து எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து ஸ்விகி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. "ஹிட்மேன் ரசிகர்களுக்கு ஒரு சிறப்பு செய்தி. நாங்கள் ரசிகர் ஒருவரின் ட்வீட்டை நல்ல நகைச்சுவை என்ற அடிப்படையிலேயே ரீடிவீட் செய்தோம். அந்த புகைப்படத்தை நாங்கள் உருவாக்கவில்லை. எனினும், நாங்கள் அந்த தலைப்பை கவனமாக வைத்திருக்க வேண்டும். யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை. நாங்கள் எப்போதுமே மும்பை இந்தியன்ஸ் பக்கம் தான்" என்று குறிப்பிட்டுள்ளது.
A special message to the Hitman’s fans
We reposted a fan’s tweet in good humour. While the image was not created by us, we do admit it could’ve been worded better. It was not meant to offend anyone in the least. Needless to say, we’re always with the Paltan.
— Swiggy (@swiggy_in) April 13, 2021